Vidya Pradeep; நாயகி சீரியல் நடிகை ஒரு டாக்டரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே! சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வித்யா பிரதீப் மருத்துவர் உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 1992 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு மாடல், நடிகை என்றால் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், அறிவியல் அறிஞர் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியலில் ஆனந்தி திருமுருகன் கதாபாத்திரத்தில் வரும் வித்யா பிரதீப் மருத்துவர் உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாடலான வித்யா பிரதீப் பிரிண்ட் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் வீடியோவிலும் கலந்து கொண்டுள்ளார்.
அதன் பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய் உதவியுடன் அவரது இயக்கத்தில் வந்த சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பிரதீப்.
இப்படத்தைத் தொடர்ந்து அதிபர், பசங்க 2, ஒண்ணுமே புரியல, தல கல புரியல, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம் என்று பல படங்களில் நடித்துள்ளார். தடம் படத்தில் போலீஸ் அதிகாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தடம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தற்போது, ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.
கூடவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலிலும் ரொம்பவே பிஸி. இப்படி நடித்து தான் ஒரு நடிகை என்பதை உலகிற்கு வெளிக்காட்டினாலும், தற்போது வந்துள்ள புகைப்படம் அவரை ஒரு மருத்துவராக அறிமுகம் செய்துள்ளது.
பயோ டெக்னாலஜி பிரிவில் மாஸ்டர் டிகிரியை முடித்துள்ள வித்யா பிரதீப், சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துவ கல்லூரியில் பிஹெச்டி படிப்பை முடித்துள்ளார்.
தற்போது வித்யா பிரதீப் மருத்துவ உடையில் இருக்கும் புகைப்படங்கள் எல்லாமே சமூக வலைதளங்களில் வரிசைகட்டி வெளியாகி வருகிறது.
இந்தப் புகைப்படங்களை பார்க்கும் போது அவரது ரசிகர்களுக்கு உற்சாகமாகவும், வியப்பாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.