Home சினிமா கோலிவுட் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்: டுவிட்டரில் டிரெண்டாகும் 3YearsofAAA!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்: டுவிட்டரில் டிரெண்டாகும் 3YearsofAAA!

354
0
AAA Movie

Simbu; அன்பானவன் அசராதவன் அடங்காதவன்: டுவிட்டரில் டிரெண்டாகும் 3YearsofAAA! சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைக்கு வந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகியுள்ளது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் திரைக்கு வந்து 3 ஆண்டுகளை கடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்ககூடியவர்.

இவரைப் பற்றிய காதல் கிசுகிசு ஏராளமாக வரும். அண்மையில், கூட இவருக்கும், கோடீஸ்வர பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், சிம்புவின் இந்த திருமணம் குறித்து அவரது பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், இது முற்றிலும் வதந்தி என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். இந்தப் படத்தைத் தொடர்ந்து 90 எம்.எல். என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வந்த கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். இந்த குறும்படத்தின் வீடியோ அண்மையில் யூடியூப்பில் வெளியானது.

தற்போது, மஹா மற்றும் மாநாடு ஆகிய இரு படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், டுவிட்டரில், 3YearsofAAA என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஆம், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி திரைக்கு வந்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இந்தப் படத்தில் சிம்பு வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மதுரை மைக்கேல்/அஸ்வின் தாத்தா மற்றும் திக்கு சிவா ஆகிய ரோலில் நடித்திருந்தார். சிம்புவுடன் இணைந்து தமன்னா மற்றும் ஸ்ரேயா ஆகியோரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆன நிலையில், டுவிட்டரில், 3YearsofAAA என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Previous articleவனிதாவின் டாட்டூ: அன்பின் சின்னமாக பதிக்கப்பட்ட புகைப்படம்!
Next articleவைரலாகும் ராணாவின் திருமண சடங்கு புகைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here