இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் ஐசிசி முழுநேர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது
இண்டர்நேசனல் கிரிக்கெட் கவுன்சிலில் மொத்தம் 12 நாடுகள் மட்டுமே முழுநேர உறுப்பினர்களாக உள்ளனர். 105 நாடுகள் இணை உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
முழுநேர உறுப்பினர்கள் அந்தஸ்து கொண்ட நாடுகள் மட்டுமே அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும்.
105 நாடுகளுக்குச் சென்ற வருடம் T20 போட்டிகள் விளையாட சர்வதேச அந்தஸ்தை ஐசிசி வழங்கியது. ஆனால் ஒருநாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் தொடரை சர்வதேச அளவில் விளையாட முடியாது.
முழுநேர உறுப்பினர்களைக் கொண்ட 12 நாடுகள் மட்டுமே அனைத்துப் போட்டிகளையும் சர்வதேச அளவில் விளையாடத் தகுதி வாய்ந்தவர்கள்.
இந்த 12 பேர் பட்டியலில் இருந்து சில காரணங்களுக்காக இலங்கை அணி நீக்கப்பட்டது. தற்பொழுது 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 12 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், சவுத் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் முழுநேர உறுப்பினர்கள் ஆவர்.