Home சினிமா இந்திய சினிமா ஸ்ரதா கபூர் போலீஸ் ஆக நடிக்கும்: சேட்ஸ் ஆஃப் சாஹோ 2

ஸ்ரதா கபூர் போலீஸ் ஆக நடிக்கும்: சேட்ஸ் ஆஃப் சாஹோ 2

492
0
ஸ்ரதா கபூர்

ஸ்ரதா கபூர் போலீஸ் ஆக நடிக்கும்: சேட்ஸ் ஆஃப் சாஹோ 2

சாஹோ திரைப்படத்தில் வெளியான மேக்கிங் வீடியோவில் ஸ்ரதா கபூர் போலீஸ் ஆக நடிப்பது தெரிகிறது. இயக்குனர் சுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தயாராகும் திரைப்படம் தான் இதுவாகும்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் 2017ஆம் ஆண்டே துவங்கியது. 300 கோடி செலவில் எடுக்கப்படும் ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஆகும்.

நடிகர் பிரபாஸ் பிறந்த நாளான 23 அக்டோபர் 2017ஆம் ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டனர். அடுத்த பிறந்த நாளுக்கு அதவாது 23 அக்டோபர் 2018க்கு முதல் ஜப்டர் வெளியிட்டனர்.

இப்போது ஸ்ரதா பிறந்த நாளுக்கு இரண்டாவது ஜப்டர் வெளியிட்டுள்ளனர். இதில் கையில் துப்பாக்கியுடன் ஸ்ரதா இருப்பது தெரிகிறது. நேர்மையான போலீஸ் ஆக ஸ்ரதா நடித்துள்ளார் என்று தெரிகிறது.

ஹாலிவுட் ஆக்சன் டைரக்டர் கென்னி பேட்ஸை வைத்து அனைத்து சண்டைக்காட்சிகளும் எடுக்கப்படுகின்றன. அபு தாபியில் சண்டைக்காட்சிகள் மட்டுமே தோராயமாக 90 கோடி வரை செலவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அனைத்துக் காட்சிகளுமே ரியல் ஆக எடுப்பதற்காக 37 கார்கள், 5 பெரிய டிரக்குகள் என சண்டைக்கு பயன்படுத்தி நாசம் செய்து இருக்கின்றனர்.

சாஹோ திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுவதாகவும் ஐதராபாத், மும்பை, அபு தாபி, துபாய் மற்றும் ரோமானியா நகரங்களில் படமாக்கி வருகின்றனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ஜாக்கி ஷேரோப், நெயில் நிதின், மந்திரா பேடி மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸ் செய்வதாக கூறியுள்ளனர்.

Previous articleஇலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் ‘ஐசிசி முழுநேர உறுப்பினர்’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது
Next articleபுதுப்பேட்டை 2: என் பேரு கொக்கி குமாரு கேள்வி பட்டுருக்கியா?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here