புதுப்பேட்டை 2: என் பேரு கொக்கி குமாரு கேள்வி பட்டுருக்கியா?
2006 ஆம் ஆண்டு Selvaraghavan இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் புதுப்பேட்டை. தமிழில் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் மூவி.
பொதுவாக செல்வராகவன் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாது. அதேவேளை காலம் காலமாகப் பேசப்படும் படமாக அமையும்.
புதுப்பேட்டை படமும் அப்படித்தான் செல்வராகவன் மதிப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் உயர்த்திய படம்.
அதன்பிறகு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படமும் செல்வராகவனுக்கு மிகப்பெரிய பிம்பத்தைக் கொடுத்தது.
இந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்பதே ரசிகர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்து வந்தது.
வை ராஜா வை படத்திலும் என் பேரு கொமாரு, கொக்கி குமாரு கேள்வி பட்டுருக்கியா? என வசனம் பேசி அசத்துவார்.
ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்க விருப்பம் உள்ளது என செல்வராகவன் டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட தனுசிடம் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே அதுகுறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் புதுப்பேட்டை 2 படம் வெளியாகும் என பதிலளித்தார்.