Home Latest News Tamil ஸ்ரீ இராம நவமி சிறப்புகள் மற்றும் விரதமுறை

ஸ்ரீ இராம நவமி சிறப்புகள் மற்றும் விரதமுறை

611
1
rama navami 2020

sri rama navami 2020 special | இராம நவமியின் சிறப்புகள் என்ன? எவ்வாறு விரதமிருப்பது? இராம நாமத்தின் சிறப்புகள் என்ன? 2020இல் இராமநவமி எப்போது வருகிறது?

sri rama navami 2020 :- நமது பாரத தேசத்தில் அதர்மம் அதிகமாக தலை விரித்தாடும் போதெல்லாம். தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவதரிப்பார் என்று நம்பப்படுகிறது.

அப்படி தர்மத்தை நிலை நாட்ட இறைவன் அவதாரம் செய்த கதைகள் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

இராமாயணம், மகாபாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என நீள்கிறது.

இந்த வரிசையில் முதலாவதாக சொல்லப்படுகின்ற இராமாயணத்தின் கதாநாயகன் இராமன் ஆவார்.

அவரின் பிறப்பு மற்றும் சிறப்பை விரிவாக பார்க்கலாம்.

இராமர் பிறந்த இராம நவமி | The Birthday of Lord Rama rama navami

ரகு குலத்தில் தசரத மகாராஜாவிற்கும் அவரின் முதல் மனைவியான கோசலைக்கும் சித்திரை மாதம் சுக்ல பட்ச நவமி திதியில் விஷ்ணுவின் அவதாரமாக ஸ்ரீ இராமசந்திரமூர்த்தி பிறந்தார்.

இவர் பிறந்த இந்த பொன்னாளே “இராம நவமி” என்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ இராமரின் பிறப்பு | Lord Ram’s birthday

சூரிய குலத்தின் மன்னனான தசரத மகாராஜாவிற்கு மூன்று மனைவிகள். ஆனால் மூவருக்கும் குழந்தை இல்லை.

இதனால் அடுத்த அரச பட்டத்தை பெற மகன் இன்றி வருந்தினார். குரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி ரிருஷ்யசிருங்க முனிவரை அழைத்து வந்து புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்தினார்.

யாகத்தின் பயனாக யக்ஞபுருஷன் தோன்றி பாயசம் நிறைந்த கிண்ணத்தை வழங்கினார். அந்த பாயசத்தை மூன்று மனைவிகளுக்கும் சரி சமமாக பிரித்து வழங்கினார்.

அதன் பின் அவருக்கு நான்கு மகன்கள் தோன்றினர். இராமன், லட்சுமணன், பரதன், சத்ருகனன் என்ற நான்கு புத்திரர்கள் தோன்றினர்.

இதில் முதலாவது மகனே மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ இராமர் ஆவார்.

வட இந்தியாவில் இராம நவமி

இராமர் உத்திர பிரதேஷத்தில் உள்ள அயோத்தியில் பிறந்து ஆட்சி புரிந்தார். எனவே அவர் பிறந்த ஊரான அயோத்தியில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விரதமிருந்து இராமரை போற்றுகின்றனர்.

தென் இந்தியாவில் இராம நவமி

தெலுங்கானா மாநிலம் பத்ராசலத்தில் இராம நவமியில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

இராமர் சீதை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இது மிகவும் பிரச்சித்தமாகும்.

தமிழ்நாட்டில் ராமர் வனவாசத்தில் பாதம் பதித்த பல ஊர்களில் அவருக்கு கோவில் எழுப்பி கொண்டாடுகின்றனர். குறிப்பாக இராமேஸ்வரம், சேலம் (அயோத்தியாபட்டினம்), வடுவூர், நெடுங்குன்றம், புல்லபூதங்குடி போன்ற ஊர்களில் இராமருக்கு தனி கோவில்கள் உண்டு.

அங்கு மிக விஷேசமாக இராம நவமியை கொண்டாடுகின்றனர்.

இராம நவமி விரதம்

இராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி, குழந்தை ராமர் படத்தை வைத்து பூஜிக்கின்றனர். தொட்டில் கட்டி குழந்தை இராமர் பொம்மையை வைத்து ஆட்டுகின்றனர்.

குழந்தை வரம் வேண்டி நாள் முழுதும் விரத்தமிருந்து ஆரத்தி முடிந்த பின் உணவு உண்டு விரதம் முடிக்கின்றனர். ஏழைகளுக்கு அன்னதானம் செய்கின்றனர். நாள் முழுதும் ராம நாமம் சொல்கின்றனர்.

படியுங்கள் ஸ்ரீ ராம நவமி: ராமர் ஜாதகம் உணர்த்தும் ஜோதிட ரகசியங்கள்!

இராம நாம ஜெபம், வால்மீகி மற்றும் கம்ப இராமாயணம் முற்றோதல்,, சங்கீர்தனங்கள், பஜனைகள்  செய்கின்றனர்.

இராம நாமத்தின் சிறப்பு | rama navami 2020 special

இந்த உலகில் இராம நாமத்திற்கு ஈடாக எதுவுமே இல்லை மந்திரமும் இல்லை என்பதை சிவ வாக்கியர் தனது பாடலில் விளக்கி கூறியுள்ளார்

“அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே – 10

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராம என்னும் நாமமே -11
சிவவாக்கியர்

2020 இல் இராம நவமி

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று இராம நவமியானது வருகின்றது. இந்த நாளில் எல்லாம் வல்ல இராமனின் நாமத்தை ஜெபம் செய்ய வேண்டும்.

“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம்‌
ராமநாம வரானனே”

என்கிறது விஷ்ணு சகஸ்ரநாமம்
நம்மால் இயன்ற அளவு ராம நாமத்தை இராம நவமியில் ஜபித்து அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களை போக்கி கொள்வோம்.

Previous articleமரணதண்டனை அவசியமா ? ஆய்வில் அதிர்ச்சி
Next articleவான் தூறல்கள் லிரிக் வீடியோ வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here