Home சினிமா கோலிவுட் சூர்யாவின் வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சூர்யாவின் வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

399
0
Vaadivasal First Look Poster

Vaadivasal First Look; சூர்யாவின் வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடி வாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

காப்பான் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. பெண் இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், ஜாக்கி ஷெராஃப், விவேக் பிரசன்னா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த மே மாதம் படம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து, சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து முதல் முறையாக வெற்றிமாறன் உடன் இணைந்து ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த நிலையில், சூர்யாவின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அந்தப் போஸ்டரில், சூர்யா வெறும் பனியன் மற்றும் கழுத்தில் டாலர் அணிந்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் வாடிவாசல் படத்தில் சூர்யா மாடுபிடி வீரனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தப் படத்தில் சூர்யா இருவேறு கதாபாத்திரங்களில் அதுவும், அப்பா – மகன் ரோலில் நடிப்பதாக செய்தி வெளியானது.

எழுத்தாளர் பூமணியன் எழுதிய வெக்கை நாவலை கொண்டு அசுரன் படம் வெளியிடப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறன் அதில் வெற்றியும் கண்டார். தற்போது, வாடிவாசல் என்ற குறுநாவலை படமாக இயக்க இருக்கிறார்.

கடந்த 1959 ஆம் ஆண்டு எழுத்தாளர் சிசு செல்லப்பா எழுதிய குறுநாவல் வாடிவாசல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து டுவிட்டரில், #Vaadivasal என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Previous articleஇருளர் வாழ்க்கையை படமாக்கி வரும் சூர்யா: பேராசிரியர் கல்யாணி மகிழ்ச்சி!
Next articleஆடி மாத தரிசனம் 9: புவனேஸ்வரியும் அஷ்டா தச புஜ மகாலட்சுமியும் ஒரே நேர்க்கோட்டில் அமர்ந்த ஆலயம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here