சென்னை: உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இறங்கிய 18 விமான பயணிகளுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை வந்த 10 பயணிகளுக்கு கொரோனா
சென்னை, மும்பை , புதுடெல்லி மற்றும் பெங்களூருவில் இருந்து கோவை வந்த 10 பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலம் வந்த 5 பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் டெல்லியில் இருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் விமானத்தில் சென்னையில் இருந்து சேலம் வந்த 56 பயணிகளில் கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மற்றவர்கள் தனிமை படுத்தப்பட்டனர்.
விமானிகளும் தனிமை
இந்த விமானங்களை ஓட்டிய விமானிகளும் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் அருகில் அமர்ந்தவர்களை பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு விமான நிலையங்களில் தரை இறங்கியவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதால், சுகாதாரத்துறை சென்னையில் தரையிரங்கிய அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது.