Home சினிமா கோலிவுட் வலிமை படக்குழுவினருக்கு அறிவுரை வழங்கிய தல அஜித்!

வலிமை படக்குழுவினருக்கு அறிவுரை வழங்கிய தல அஜித்!

286
0
Valimai Shooting

Thala Ajith; வலிமை படக்குழுவினருக்கு அறிவுரை வழங்கிய தல அஜித்! கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலும் சரியான பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்க வேண்டும் என்று தல அஜித் அறிவுரை வழங்கியுள்ளார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பை இப்போது தொடங்க வேண்டாம் என்று தல அஜித் வலிமை படக்குழுவினர் மற்றும் போனி கபூரை கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டையே உலுக்கிய சம்பவம் தான் கொரோனா வைரஸ் தாக்கம். நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனினும், பல விதிமுறைகளுடன் கொரோனா லாக்டவுன் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றிற்கு இன்னும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சினிமா படப்பிடிப்புகள் தொடங்குவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும், பலரும் சினிமா படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ் ஹீரோக்களின் படங்களின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. அந்த வகையில், ரஜினியின் அண்ணாத்த, தல அஜித்தின் வலிமை ஆகியவை முக்கியமானவை.

வெளிநாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்தலாம் என்று படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வலிமை படப்பிடிப்பு குறித்து தல அஜித் தனது படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளருக்கு முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன்படி, கொரோனா வைரஸ் தாக்கத்தை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், உள்ளூர் அரசிடம் அனுமதி பெற்றாலும் அவசப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரிடம், தான் வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னரே அடுத்த படத்திற்கு செல்வேன் என்றும், கொரோனா நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும்படியும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஸி நடிப்பதாக கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleவிஷ்ணு கேட்ட வாய்ப்பு: கலாய்த்த சாந்தனு!
Next articleதமிழ்நாட்டின் கொரோனா தொற்று 35000ஐ நெருங்கியது, இறந்தோர் எண்ணிக்கை 307 ஆக உயர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here