Rachel White; எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை டுவீட்! கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று நடிகை ராச்சல் ஒயிட் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று நடிகை ராச்சல் ஒயிட் தனது ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மும்பையில், பாலிவுட் பிரபலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா, அபிஷேக் பச்சன், நவ்யா சாமி, ரவிகிருஷ்ணா என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
இந்த நிலையில், தற்போது தல அஜித்தின் மங்காத்தா படத்தில் நடித்த நடிகை ரச்சல் ஒயிட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரச்சல் ஒயிட் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இவர், ஏராளமான வங்காள மொழி படங்களில் நடித்துள்ளார். இம்ரான் ஹாஸ்மி, கங்கனா ரணாவத் ஆகியோரது நடிப்பில் வந்த உங்கலி என்ற படத்திலும் நடித்துள்ளார்.