Home சினிமா கோலிவுட் முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி!

முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி!

275
0
Vijay Sethupathi Web Series

Vijay Sethupathi Web Series Debut; முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி! முதல் முறையாக மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக நடிகர் விஜய் சேதுபதி வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. நானும் ரௌடி தான், சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இவரது நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், கடைசி விவசாயி, உப்பென்னா, லா சிங் சத்தா, காத்து வாக்குல ரெண்டு காதல், க/பெ.ரணசிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார்.

படங்களில் நடிப்பதைக் காட்டிலும், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த வெப் சீரிஸ்களில் நடிப்பதில் நடிகர், நடிகைகள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, நடிகை பூர்ணா, மீனா போன்ற நடிகைகள் வெப் தொடரில் நடித்துள்ளனர். நடிகர்கள், பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இவர்களது வரிசையில், சமந்தா, தமன்னா, பிரியா பவானி சங்கர், பிரியாமணி, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் பலரும் வெப் சீரிஸில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது மாஸ் நடிகரான விஜய் சேதுபதியும் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த வெப் சீரிஸை 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று நடிகர் சூர்யாவும் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார். 9 கதைகள் கொண்ட வெப் சீரிஸை 9 இயக்குநர்கள் இயக்க இருக்கின்றனர்.

சூர்யா நடிக்கும் எபிசோடை 180 பட இயக்குநர் ஜெயேந்திர பஞ்சாபகேசவன் இயக்க இருக்கிறார். இந்த வெப் சீரிஸை இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளருக்கு கொரோனா: திருச்சி
Next articleஎனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: கொரோனா பாதிக்கப்பட்ட நடிகை டுவீட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here