Viswasam TRP Rating; 3ஆவது முறையாக சாதனை படைத்த தல அஜித்தின் விஸ்வாசம்! தல அஜித்தின் விஸ்வாசம் படம் 3ஆவது முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு டிஆர்பியில் முதலிடம் பிடித்து 3ஆவது முறையாக சாதனை படைத்துள்ளது.
3ஆவது முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு டிஆர்பியில் முதலிடம் பிடித்து தல அஜித்தின் விஸ்வாசம் படம் சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, அனிகா ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு பொங்கலுக்கு வந்த படம் விஸ்வாசம்.
குடும்ப கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படம் அப்பாவுக்கும், மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை வெளிக்காட்டியது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.
படம் மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. இமான் இசை என்றால் சும்மாவா.
இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலையில், கடந்த 12 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் விஸ்வாசம் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இது தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. ஆம், சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தப் படத்தை 16.12 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதற்கு முன்னதாக, 15.59 பேர் பார்த்துள்ளனர்.
முதல் முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்ட போது, 18.14 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3 முறை ஒளிபரப்பு செய்யப்பட்டு ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. விஸ்வாசம் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, டுவிட்டரில், #Viswasam விஸ்வாசம் ஹேஷ்டேக் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.