Home சினிமா கோலிவுட் தடையை மீறி ஏரியில் மீன் பிடித்த விமல், சூரிக்கு அபராதம்!

தடையை மீறி ஏரியில் மீன் பிடித்த விமல், சூரிக்கு அபராதம்!

311
0
Soori and Vimal in Kodaikanal

Soori and Vimal; தடையை மீறி ஏரியில் மீன் பிடித்த விமல், சூரிக்கு அபராதம்! ஊரடங்கு காலத்தில் தடையை மீறி ஏரியில் மீன் பிடித்த விமல் மற்றும் சூரிக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சூரி மற்றும் விமலுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அச்சத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்திய கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா லாக்டவுன் காரணமாக சுற்றுலா தளங்களுக்கு சென்றுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தடையையும் மீறி நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர் கொடைக்கானலுக்கு சென்றதோடு, மீன் பிடித்தும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

கடந்த 17 ஆம் தேதி சூரி, விமல் மற்றும் 2 இயக்குநர்கள் ஆகியோர் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு அனுமதி பெறாமலும், கட்டணம் செலுத்தாமலும் சென்றுள்ளனர்.

அதோடு, அந்த ஏரியில் மீன்பிடித்தும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிரவும் செய்துள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் இருவருக்கும் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் இருவரும் இபாஸ் பெற்று சென்றார்களா? இல்லையா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். ஆனால், அவர் இ பாஸ் பெற்று சென்றாரா? இல்லையா என்பது சர்ச்சையான நிலையில், ஏற்று அவர் இபாஸ் பெற்று சென்றதற்கான ஆதாரம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பிரபலங்களே இப்படி செய்யலாமா? என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

Previous articleஹாட்ரிக் சாதனை படைத்த தல அஜித்தின் விஸ்வாசம்!
Next articleசன் டிவியில் தல அஜித்தின் வீரம்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here