Thala Ajith Vivegam Teaser; தல ரசிகர்கள் கொண்டாட்டம்: விவேகம் டீசர் வெளியான நாள்! தல அஜித் நடிப்பில் திரைக்கு வந்த விவேகம் படத்தின் டீசர் வெளியாகி நேற்றுடன் 3 ஆண்டுகளை கடந்துவிட்டது.
விவேகம் டீசர் வந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த படம் விவேகம். ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஏஜெண்டாக (கவுன்டர் டெரரிஸ்ட் ஸ்குவாட் ஏஜென்ட்) அஜய் குமார் (ஏகே) என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார்.
தேட முடியாதவர்களையும் எளிதில் தேடி கண்டுபிடிப்பதிலும், கொல்ல முடியாதவர்களை தேடிக் கொள்வதிலும் ஸ்பெஷலிஸ்ட். அஜித்தின் உயிர் நண்பன் விவேக் ஓபராய் (ஆர்யன்).
உலகின் 3 இடங்களில் செயற்கை நிலநடுக்கத்தை உண்டாக்கி அழிக்கக்கூடிய ஆயுதத்தை தேடி கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் பொறுப்பு அஜித்துக்கு வருகிறது. ஆனால், அதன் பாஸ்வேர்டு அக்ஷரா ஹாசனுக்கு தெரியும்.
ஆதலால், முதலில் அவரை தேடி கண்டுபிடிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பல அசம்பாவிதங்களை சந்திக்கும் அஜித், அதன் பிறகு எதிரிகளின் சூழ்ச்சிகளை எப்படி முறியடித்தார் என்பதே அடுத்த பார்ட்.
அஜித்துக்கு உரிய ஆக்ஷன் பிளாக்கை கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதும் பயணத்திருக்கிறார் தல. இடையிடைல், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் காட்சிகள் அவ்வளவு தான்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி விவேகம் திரைக்கு வந்தது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இவரது இசையில் வந்த சர்வைவா, தலை விடுதலை ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே மாஸ் வரவேற்பு பெற்றன.
விவேகம் படத்தின் டீசர் கடந்த 2017 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி வெளியானது. டீசர் வெளியாகி நேற்றுடன் 3 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது தல ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், ஹலோவில், விவேகம் டீசர் நாள் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விவேகம் டயலாக்
இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும், நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கொள்ளும் வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது. நெவர் எவர் கிவ் அப்….
சும்மாவே தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். இப்போது, விவேகம் டீசர் வெளியாகி 3 ஆண்டுகள் வேற ஆச்சு. அப்புறம் என்ன கொண்டாட்டம் தானே.