Master New Release Date; மாஸ்டர் நியூ ரிலீஸ் தேதியுடன் வைரலான புதிய போஸ்டர்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் நியூ ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் நியூ ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்த நிலையில், உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் மட்டும் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்து படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், தளபதி விஜய்யின் மாஸ்டர் படமும் ஒன்று.
ஆம், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் 22 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அன்று ஒருநாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது சமூக விலகல் எனப்படும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.
இதன் விளைவாக மாஸ்டர் படம் அறிவித்தபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாஸ்டர் படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் டைட்டில் போஸ்டர் உடன் கூடிய மாஸ்டர் புதிய ரிலீஸ் தேதியும் வைரலாகி வருகிறது. ஆம், வரும் மே 1 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என்று அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதா? இல்லை ரசிகர்கள் இது போன்று செய்துள்ளனரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
எனினும், மாஸ்டர் புதிய ரிலீஸ் தேதி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதோடு, மே 1 என்பது தொழிலாளர்கள் தினம். அதோடு, தல அஜித்தின் 49ஆவது பிறந்தநாள். ஆகையால், அவரது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது.
இதற்கு முன்னதாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வரலாம் என்றுதான் நான் கோட் சூட் அணிந்து வந்தேன் என்று விஜய் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.