Sunaina : தமிழ் திரையுலகில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுனைனா (Sunaina). இதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் சுனைனா நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் சுனைனா நடித்திருக்கிறார். கடைசியாக சுனைனா (Sunaina) நடித்து கோலிவுட்டில் வெளியான படம் ‘சில்லுக் கருப்பட்டி’.
ஆந்தாலஜி படமான ‘சில்லுக் கருப்பட்டி’யை இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.
‘சில்லுக் கருப்பட்டி’ படத்துக்கு பிறகு நடிகை சுனைனாவின் (Sunaina) கால்ஷீட் டைரியில் ‘ட்ரிப்’ மற்றும் ‘எரியும் கண்ணாடி’ என அடுத்தடுத்து இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘ட்ரிப்’ என்ற படத்தை அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் கதையின் மிக முக்கிய வேடங்களில் யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். வெகு விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று நடிகை சுனைனா (Sunaina) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘ட்ரிப்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுனைனாவை (Sunaina) நாய் ஒன்று ஓடி வந்து கடிப்பது போல் இடம்பெறும் காட்சியை படமாக்கும் போது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Yes, that is me with a pitbull for my next Tamil film, #TRIP . #BehindTheScenes @dennisfilmzone pic.twitter.com/1CSNasg9v1
— Sunainaa (@TheSunainaa) April 3, 2020