Sangeetha Vijay Birthday; விஜய்யை பார்க்க ஓடோடி வந்த சங்கீதாவின் பர்த்டே டுடே! விஜய்யின் மனைவி சங்கீதா இன்று தனது 48ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதன் காரணமாக #HBDSangeethaVIJAY என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
விஜய்யின் மனைவி சங்கீதா இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய். இவருக்கு ரசிகர்கள் இல்லாத நாடே, உலகமே இருக்க முடியாது. பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான விஜய்க்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம்.
பெரும்பாலும் இவரது படங்களில் குழந்தைகளுக்கு பிடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும்.
குழந்தைகளைத் தொடர்ந்து விஜய்யின் நடிப்பி, டான்ஸ் ஆகியவற்றிற்கு என்று தனி ரசிகைகளும் உண்டு. அந்த வகையில் தன் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார்.
இலங்கையை பூர்விகமக கொண்ட சங்கீதா குடும்பத்துடன் லண்டனில் வசித்து வந்துள்ளார்.
நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும்…அவருடன் எப்படியாவது பேச வேண்டும் வேண்டும் லண்டனில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தார்.
விஜய் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று வந்துள்ளார். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை.
தனக்கு இப்படியொரு ரசிகை இருப்பதை அறிந்த விஜய் சங்கீதாவை வீட்டிற்கு அழைத்து சென்று, அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். விஜய்யின் குடும்பத்தோடு சங்கீதா பேசி மகிழ்ந்துள்ளார்.
மறுபடியும் விஜய்யைப் பார்க்க சென்னை வந்துள்ளார் சங்கீதா. இதையறிந்த விஜய் சங்கீதாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்துள்ளார்.
இறுதியாக, விஜய்க்கு சரியான ஜோடி சங்கீதாதான் என்பதை அறிந்த விஜய்யின் பெற்றோர்கள், அவரிடமே விஜய்யை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என்று கேட்டுள்ளனர்.
இதற்கு எந்த தயக்கமும் இன்றி சங்கீதா ஓகே சொல்ல. உடனே சங்கீதாவின் பெற்றோரிடம் சம்மதம் வாங்க விஜய்யின் குடும்பத்தினர் லண்டன் சென்றுள்ளனர்.
கடைசியாக சங்கீதாவின் பெற்றோர்களும் ஓகே சொல்ல, கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி விஜய் – சங்கீதா திருமணம் நடந்தது. இதையடுத்து, தற்போது சஞ்சய் என்ற மகளும், திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று சங்கீதா இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய் மட்டுமல்ல, தளபதி விஜய்யின் ரசிகர்களும் சங்கீதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சங்கீதா விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDSangeethaVIJAY என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Wrong information that she is 48 elder than her husband