மாவட்டம் முழுவதும் காய்கறிகளை வீடுகளுக்கு டெலிவெரி செய்ய முடிவு செய்த கலெக்டர், கொரோனா பரவலை தடுக்க காய்கறிகளை டோர் டெலிவெரி செய்ய முடிவு செய்த திருப்பூர் கலெக்டர்.
நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாள் ஊரடங்கை அரசாங்கம் அறிவித்தது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.
தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மல்லிகை மற்றும் பால் வாங்க காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திருப்பூர் அரசு ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் காய்கறி வீடு தேடி வர சிறப்பு வசதி செய்ய உள்ளது.
வீடு தேடிவரும் காய்கறிகள் என்னும் இந்தத் திட்டத்தின்படி, 30 ரூபாய்,, 50 ரூபாய், 100 ரூபாய் என மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு மக்களின் வீடுகளுக்கு செல்லும்.