Thittam Irandu First Look; திட்டம் இரண்டு (PLAN B) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! ஐஸ்வர்யா ராஜேஷின் நடிக்கும் திட்டம் இரண்டு (PLAN B) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
நீதானா அவன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, மனிதன், தர்ம துரை, சாமி 2, வட சென்னை, கனா, வானம் கொட்டட்டும், நம்ம வீட்டுப்பிள்ளை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மிகவும் எளிமையாகவும், கிளாமர் இல்லாமலும் நடிக்கும் சிறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோயின் மட்டுமல்லாமல், தங்கை ரோல் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கும் திறன் கொண்டவர். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது இவரது நடிப்பில், பூமிகா, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து, தற்போது, விஜே, ஆர்ஜே, தொலைக்காட்சி நடிகர் மற்றும் இயக்குநரான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. இதனை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, படத்திற்கு திட்டம் இரண்டு (PLAN B) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஒரு பேப்பரில் ஐஸ்வர்யா ராஜேஷின் உருவம் வரையப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, ஊசி, மருந்து, துப்பாக்கி, போலீஸ் ஸ்டேஷன் ஃபைல், வாக்கி டாக்கி, மொபை போன் ஆகியவை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டம் இரண்டு படத்தை மினி ஸ்டூடியோ மற்றும் சிக்சர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சதீஷ் ரகுநாதன் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு திட்டம் இரண்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.