கோவை: குழந்தை ஆபாசப்படங்களை காண்பது பெரும் குற்றம் மற்றும் கடுமையாக தண்டிக்கப்படுவர் என காவல் துறை அறிவித்துள்ளது.இதை அடுத்து புதன் கிழமை கருமத்தம்பட்டி காவல் துறை சமூக வளைதளங்களில் குழந்தை ஆபாசப்படங்களை (child porn videos)பகிர்ந்ததற்காக 29 வயது உடைய நபரை கைது செய்தது. இவர் காடுவெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.
போலி முகபுத்தக கணக்கு
அந்த நபரின் பெயர் இரங்கநாதன் என தெரியவந்தது. மேலும் காவல் துறை தெரிவிக்கையில், அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் எனவும்,”அந்த நபர் கடந்த ஒருவருடமாக குழந்தைகளை ஆபாச காணொளிகளை பார்ந்து வந்துள்ளார் எனவும். மேலும் அவர் போலி முகபுத்தக(facebook) கணக்கை துவங்கி அந்த காணொளிகளை மற்ற நபர்களுக்கு பகிர்ந்துள்ளார்.” என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடும் நடவடிக்கை
இவர் மீது முதல் தகவல் அறிக்கை(FIR)67A,67Bபிரிவு r/w15(1)ஆகிய பிரிவுகளில் போஸ்கோ (Protection of Children from Sexual Offences(POSCO))சட்டம் பாய்ந்தது.
பிறகு இரங்கநாதன் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மே 20 வரை சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு 2012 ஆம் ஆண்டு போஸ்கோ சட்டம் இயற்றப்பட்டதாக தெரிகிறது.
குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு இத்தகைய குற்றங்கள் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.