Home Latest News Tamil Today Breaking News Tamil | இன்றைய முக்கிய செய்திகள் 02.04.2020

Today Breaking News Tamil | இன்றைய முக்கிய செய்திகள் 02.04.2020

557
0
tamil news

Today Breaking News Tamil | இன்றைய முக்கிய செய்திகள் 01.04.2020

tamil latest breaking news : கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியுள்ளது 

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அதிகரித்து உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காணொளி மூலம் கலந்துரையாடுகிறார் .

விழுப்புரத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த தெரு முழுவதும் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்காக தயாரிக்கும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்தார் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம்.

மருத்துவ வார்டுஆக மாறியது ஊட்டி நகராட்சி பள்ளி.

இலவச ரேஷன் அரிசி மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நேற்று மட்டும் சென்னையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு.

முதல்வர் நிவாரண நிதிக்கு 24 லட்சம் நன்கொடை அளித்தார் எடியூரப்பா.

மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் யாரேனும் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்.

கொரோனா நோய் தொற்றால் starwars நடிகர் ஆண்டிரு ஜாக் உயிரிழந்தார்.

ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பு படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்ற மலையாள நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் படக்குழுவினர் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு.

90 கிட்ஸ் களின் ஹீரோ என அழைக்கப்படும் சக்திமான் தொடர் தினமும் இரவு 8 மணிக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும்.

நாட்டில் உள்ள 10 பொதுத்துறை வங்கிகள் நான்காக இணைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு 104 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 336 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்திய வீரர்கள் மட்டும் பங்கு பெறும் வகையில் இந்த ஆண்டு ஐபில் நடத்த திட்டம்?

கொரோனா நோய் தொற்று காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து.

கொரோனா நோய்தொற்று தடுப்பு பணிகளுக்காக ஹாக்கி இந்தியா மற்றும் இந்திய ஃபுட்பால் கவுன்செல் இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி அளித்தது.

Previous article02/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleவிம்பிள்டன் தொடர் ரத்து; இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here