இன்றைய தலைப்புச் செய்திகள் : april 12, 2020
இன்றைய தலைப்புச் செய்திகள்:- டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது: டெல்லியில் இன்று 166 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் 1069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுவதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் இன்று முதல் பேக்கரிகள் திறப்பதற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் பகல் ஒரு மணிவரை பேக்கரிகள் இயக்கப்படும்.
தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு வைரஸ் பாதிப்பு. மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 969 ஆக உயர்வு.
தமிழகத்தில் மொத்தம் எட்டு மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதிக தேவை மற்றும் லாரி வாடகை விலை உயர்வால் பருப்பு வகைகளின் விலை அதிகரித்துள்ளது. மூட்டைக்கு ரூபாய் 3 ஆயிரம் வரை விலை அதிகரித்துள்ளது, மளிகை பொருட்களும் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் 50,000 கட்டிட தொழில்கள் பாதிப்பு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிப்பு.
ஒரு தலைமுறையின் சிறந்த வீரர் தோனி, அவரை உடனடியாக ஓய்வுபெற கட்டாயப்படுத்தினால் இப்போது விட்டு விட்டால் மீண்டும் கிடைக்கவே மாட்டார் என்று நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதில் சந்தேகம் உள்ளதாக தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படும்.
உலகிற்கே இக்கட்டான தருணம்: இந்த நிலையில் நாம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார் பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.