Director Balamithran Passed Away; உடுக்கை இயக்குநர் பாலமித்ரன் திடீர் மரணம்! படப்பிடிப்பு முடிவதற்கு 5 நாட்கள் உள்ள நிலையில், உடுக்கை இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக் குறைவு மரணமடைந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுமுக இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுத்தியதிலிருந்து கோலிவுட் சினிமாவில் பிரபலங்கள் பலரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், லாக்டவுனில் விசு, இர்ஃபான் கான், ரிஷி கபூர், நடிகர் சேது ஆகியோர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகரும், ஆக்ஷன் கிங் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சிவி சார்ஜா மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
பாலிவுட் சின்னத்திரை நடிகர்கள் மன்மீத் கெர்வால் பணப்பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 4ஜி பட இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இவ்வளவு ஏன் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய், சுஷாந்த் சிங் ராஜ்புட், வருண் சிங் ஆகியோருக்கு மேனஜராக இருந்த திஷா ஷலியன் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், இது தற்கொலையா? இல்லை விபத்து என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உடுக்கை படத்தை இயக்கி வந்த அறிமுக இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, சினிமா வட்டாத்தில் சோக சம்பவங்கள் நடந்து வருகிறது. பாலமித்ரன் மரணம் குறித்து நடிகை சஞ்சனா சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
என்னுடைய உடுக்கை பட இயக்குநர் மரணமடைந்த செய்தி கேட்டு நான் அதிர்ந்து போனேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலமித்ரன் பக்கவாதம் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உடுக்கை படத்தில் சஞ்சனா சிங், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், விபின், உமர், அங்கீதா, லட்சுமி, வலீனா ஆகியோர் பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.