உசைன் போல்டின் ஆட்டம் இதோடு முடிந்தது
ஜமைக்கா நாட்டைச்சேர்ந்த 32 வயதான உசைன் போல்ட் தன்னுடைய விளையாட்டு வாழ்க்கை முடிந்து விட்டதாக சமீபத்தில் தெரிவித்தார்.
உலக அளவில் கால்பந்து வீரராக வேண்டும் என்ற தன்னுடைய கனவை கைவிட்டு இனிமேல் எந்தவித விளையாட்டிலும் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இவர் 8 முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் உலகசாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட கிளப் சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர் அணிக்காக கடந்த செப்டம்பர் மாதம் தன்னுடைய கால்பந்தாட்ட பயணத்தை தொடங்கினார்.
நல்ல ஒரு முன்னேற்றம் அவருடைய கால்பந்தாட்டத்தில் இருந்தும் அவரை சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர் கிளப் நிராகரித்தது.
கிளப்பில் காண்ட்ராக்ட் கிடைக்காததால் தன்னுடைய கால்பந்து கனவை பாதியிலேயே கைவிட்டுச் சென்றுவிட்டார்.
உசைன் போல்ட் இதுகுறித்து கூறியதாவது
என்னுடைய இந்த விளையாட்டு வாழ்க்கை இறுதிவரை மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. கற்றுக்கொள்வதே என்னுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தது. என்னுடைய அணியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மகிழ்ச்சிதான்.
என்னுடைய விளையாட்டு வாழ்க்கை இத்தோடு முடிந்ததாக நான் நினைக்கிறேன். இனிமேல் புதிதாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.