Home Latest News Tamil விஜய்யின் உண்மை முகம்: உண்மை சம்பவத்தைப் புட்டு புட்டு வைத்த நடிகர்!

விஜய்யின் உண்மை முகம்: உண்மை சம்பவத்தைப் புட்டு புட்டு வைத்த நடிகர்!

757
0
விஜய்யின் உண்மை முகம்

விஜய்யின் உண்மை முகம்: உண்மை சம்பவத்தைப் புட்டு புட்டு வைத்த நடிகர்!

விஜய்க்கும், அஜித்துக்கும் பகை உள்ளது. இருவரும் ஒருவர்மேல் ஒருவர் பொறமைப்படுவர் என இன்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

தொழில் போட்டி என்றால் என்ன? நடிப்பு என்றால் என்ன? நடிகர்களின் நட்பு என்றால் என்ன? என்பதைக்கூட ரசிகர்களால் பிரித்துப்பார்க்க முடியவில்லை.

முன்னணி நடிகர்கள் தனக்கென ஒருபோட்டி நடிகரை உருவாக்கிக்கொள்வது வழக்கமே. அது அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் என நம்புகின்றனர்.

ரசிகர் படையும் மாறி மாறி அசுர வளர்ச்சி பெரும். ஒரு காலத்தில், ரஜினி-கமல் இவர்களுக்குப் பிறகு விஜய்-அஜித் என பத்திரிக்கைகள் எழுதின.

அன்று முதல் இன்று வரை இருவரது ரசிகர்களும் ஓய்ந்த பாடில்லை.

விஜய்-அஜித் இருவரும், ஒவ்வொரு ரசிகனின் காதுக்குள் சங்கு ஊதிக் கூறினாலும், பாமர ரசிகர்களுக்கு விளங்கப்போவதில்லை.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய லொள்ளுசபா சுவாமிநாதன் விஜய் பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “நான் முதன்முதலில் வேலாயுதம் படப்பிடிப்பில் விஜய்யைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் பேசக்கூடாது என கட்டளையிட்டனர்.

வணக்கம் கூட வைக்கக்கூடாது என கட்டளைபோட்டனர். இருப்பினும் விஜய் என் அருகில் வந்தவுடன், என்னையறியாமல் வணக்கம் வைத்தேன்.

வணக்கம் கூட சொல்லவில்லை எனில் மரியாதை குறைவாக இருக்கும் என்று. அவரும் பதிலுக்கு வணக்கம் வைத்தார். மேலும் என் நிகழ்சிகள் பற்றியும் குடும்பத்தினர் பற்றியும் விசாரித்தார்.

நான் என்னுடைய மகன் உங்களின் தீவிர ரசிகன் எனக் கூறினேன். உடனே புன்னகைத்தார். உடனே, என் மகள் அஜித்தின் தீவிர ரசிகை எனக் கூறினேன். அதற்கும் அதேபோல் புன்னகை செய்தார்.

அஜித் என்றவுடன் அவர் கோபமோ, முகபாவத்தையோ மாற்றவில்லை. அதே சிரிப்புடன் தான் இருந்தார். பிறகு எப்படி அவருக்கு அஜித் மேல் பொறமையோ, கோபமோ இருக்க முடியும் எனக் கூறினார்.

அப்படி யாரவது இருவருக்கும் பகை எனக் கூறினால் அவர்கள் வேண்டுமென்றே பொய் கூறுகின்றனர் எனத் தெரிவித்தார்.

Previous articleஉசைன் போல்டின் ஆட்டம் இதோடு முடிந்தது
Next articleஇரு கைகளை உயர்த்திய விஜய்: அதன் பிறகு நடந்தது என்ன?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here