Home சினிமா கோலிவுட் ஒரே நாளில் அஜித்தை பின் தள்ளிய தளபதி: இப்போ மட்டுமல்ல எப்போவுமே விஜய் தான் நம்பர்...

ஒரே நாளில் அஜித்தை பின் தள்ளிய தளபதி: இப்போ மட்டுமல்ல எப்போவுமே விஜய் தான் நம்பர் 1!

359
0
Vijay Always No 1

Vijay; ஒரே நாளில் அஜித்தை பின் தள்ளிய தளபதி: இப்போ மட்டுமல்ல எப்போவுமே விஜய் தான் நம்பர் 1! அஜித்தை பின்னுக்கு தள்ளி தளபதி விஜய் நம்பர் இடம் பிடித்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் #VijayAlwaysNo1 என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.

ஹலோ ஆப்பில் (Helo) அதிக ஓட்டுகள் வாங்கி விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

பொதுவாகவே அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கம். ஆனால், படத்தின் பாடல், டிரைலர், போஸ்டர் படம் இப்படி ஏதாவது ஒன்று வெளியாகும் போதுதான் அவர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள்.

தற்போது நீ பெரியவனா? நான் பெரியவனா என்பதில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டுள்ளனர்.

ஆம், ஹலோ ஆப்பில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் யார் நம்பர் ஒன் என்பதில் கடும் போட்டி நிலவியது.

இதில், அதிக வாக்குகள் பெற்று விஜய் முதலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார் (AjithVsVijayInHelo). அதன் பிறகு அஜித் ரசிகர்கள் அஜித்தை வெற்றி பெறச் செய்து, காலையில் அஜித் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார்.

இந்த நிலையில், தற்போது 4,69000 வாக்குகள் பெற்று விஜய் நம்பர் மீண்டும் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார்.

இதன் காரணமாக ஹலோ டிரெண்டிங்கில் #VijayAlwaysNo1 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தல அஜித் 4,56000 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஆனால், எதற்காக சந்தானம் 3 ஆவது இடம் பிடித்துள்ளார் என்பது தெரியவில்லை. அவர் 1,67000 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் ஹலோ ஆப்பில் யார் முதலிடம் என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க விஜய்யைப் பற்றி ரசிகர்கள் வசனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில், The One and Only King Actor Vijay,

Powerful People…!!!

Come From Powerful Places..!!

Vijay Always No 1

என்றெல்லாம் பதிவிட்டு விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articlePalm Sunday; ‘சாத்தான்கள் நம்மை பிரிக்கிறது’ எனக்கூறும் மத போதகர்கள்
Next articleWwe wrestlemania தற்போது நடைபெற்று வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here