Home சினிமா கோலிவுட் அத்துமீறி நுழைந்த விஜய் ரசிகர்களை வெளியேற்றிய போலீஸ்!

அத்துமீறி நுழைந்த விஜய் ரசிகர்களை வெளியேற்றிய போலீஸ்!

318
0
Vijay Fans Leela Palace

Vijay Fans Leela Palace; அத்துமீறியதால் விஜய் ரசிகர்கள் போலீஸ் இடையில் வாக்குவாதம்? விஜய்யைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கும், போலிசுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுவதற்கு முன்னதாக விஜய் ரசிகர்கள் தாங்களாகவே வெளியில் சென்றுள்ளனர்.

விஜய்யைப் பார்க்க சென்ற ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் வாகுவாதம் ஏற்படுவதற்கு முன்னதாக விஜய் ரசிகர்கள் தாங்களாகவெ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

சென்னை லீலா பேலஸ் (Leela Palace) ஹோட்டலில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழா நடந்தது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுகிறார் என்பதை நேரில் சென்று பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், வழக்கத்திற்கு மாறாக கல்லூரியில் நடப்பதற்கு மாறாக சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது.

மாஸ்டர் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழாவிற்கு குறைவான ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் கடந்த முறை பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ஏற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

இந்த செய்தி மீடியாவில் வெளிவர, விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, இந்த முறை மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை லீலா பேலஸ் ஹோட்டலில் நடத்தினர்.

சரி, வெளியில் நின்றாவது விஜய்யையும் (Vijay Speech), அவர் என்ன பேசுகிறார் என்பதையும் கேட்டுவிடலாம் என்று லீலா பேலஸ் ஹோட்டலுக்கு விஜய் ரசிகர்கள் வந்துள்ளனர்.

எனினும், அதிகளவில் உணர்ச்சிவசப்பட்ட விஜய் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் லீலா பேலஸ் ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் விஜய் ரசிகர்கள், தாங்களாகவே கலைந்து சென்றுள்ள்னர். இதனால், எந்தவித வாக்குவாதமும், அடிதடி சண்டையும் நடக்கவில்லை.

ஆனால், விஜய் ரசிகர்கள் அமைதி காக்காதது தான் சிறிது நேர சலசலப்பிற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleMaster Songs: மொத்தம் 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியீடு!
Next articleகொரோனா வைரஸிற்கு தமிழர்களின் சாம்பிராணியே தடுப்பு மருந்து – அதிர்ச்சியில் பார்க்கும் உலகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here