விஜய் மல்லைய்யா பாஜகவின் பலி ஆடு என்றும் விஜய் மல்லைய்யா நாட்டைவிட்டுத் தப்ப நினைத்தது பாஜகவிற்கு முன்பே தெரியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தப்பி ஓட்டம்:
வங்கியில், 9000 கோடி கடன்பெற்று நாட்டைவிட்டு தப்பி ஓடியவர், தொழிலதிபர் விஜய் மல்லைய்யா. இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
நீரவ்மோடியும், விஜய் மல்லைய்யா பாணியில் கடன்பெற்று நாட்டைவிட்டு வெளியேறினார். இது பாஜகவின் அரசியல் எதிர்காலத்திற்கு மேலும் சறுக்கலாக அமைந்துவிட்டது.
டீலிங் பேசிய ஜெட்லி:
தேர்தல் நெருங்குவதால், மல்லைய்யாவை இங்கிலாந்திலிருந்து, இந்தியா கொண்டுவர பாஜக அரசு தீவிரம் காட்டிவருகின்றது. இதனால், ஆத்திரமடைந்த விஜய் மல்லைய்யா, அருண் ஜெட்லியிடம் டீலிங் பேசியதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
சிபிஐயின் வற்புறுத்தல் காரணமாக, வங்கிகள் விஜய் மல்லைய்யா மீது புகார் அளித்துள்ளது. இதன்மூலம், கைது செய்யப்பட இருப்பதை அறிந்தே அருண் ஜெட்லியிடம், மல்லைய்யா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஆனால், பேச்சுவார்த்தை நடந்த இரண்டே நாளில் மல்லைய்யா, இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:
மல்லைய்யாவை பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்ததே பாஜக அரசு தான். தேர்தல் நெருங்குவதால் மல்லைய்யாவை இந்தியா கொண்டுவரத் துடிப்பதும் பாஜக அரசு தான்.
இதன் காரணமாகவே, விஜய் மல்லைய்யா ஆத்திரத்தில், அருண் ஜெட்லியுடன் பேசிய டீலிங்கை பற்றி மறைமுகமாக தெரிவித்துள்ளார். என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விஜய் மல்லைய்யா வாய் திறந்தால், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் எனவும் இவ்விசயத்தை ஊதிப் பெரிதுபடுத்தத் துவங்கியுள்ளனர்.
அருண் ஜெட்லி மறுப்பு:
ஆனால், அருண் ஜெட்லி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய் மல்லைய்யா கடனை அடைப்பது பற்றி என்னிடம் பேசினார். நீங்கள் வங்கியிடமே இதைப்பற்றி பேசிக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டேன். இந்த சந்திப்பு வெறும் இரண்டு நிமிடங்கள் தான் நடைபெற்றது எனத்தெரிவித்துள்ளார்.
ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ‘மல்லைய்யாவிடம் அருண் ஜெட்லி 15 நிமிடங்கள் பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
பலி ஆடு:
வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு விஜய் மல்லைய்யா பாஜகவின் பலி ஆடு என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.