Home சினிமா கோலிவுட் Human விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட்: வைரலாகும் வீடியோ!

Human விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட்: வைரலாகும் வீடியோ!

388
0
Vijay Sethupathi Human Photoshoot

Vijay Sethupathi Photoshoot; விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட்: வைரலாகும் வீடியோ! விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அதே போன்று அண்மையில், மாஸ்டர் படத்தில் தனது கதாபாத்திரம் எப்படி என்பது குறித்து விஜய் சேதுபதி தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக முடங்கியிருக்கிறது. அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக புதிய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அண்மையில், டுவிட்டர் பக்கத்தில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது. இதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில், தற்போது மனிதன் என்ற பெயரில் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். மனிதன் போட்டோஷூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆதி, நிக்கி கல்ராணி காதலா? விரைவில் திருமணம்?
Next articleஜோஷுவா வில்லன் யார் தெரியுமா? பாரிஸ்ல பிட்னெஸ் பயிற்சி எடுத்த வருண்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here