ijay Speech At Master Audio Launch; ரெய்டும் நல்லா ஜாலியாத்தான் இருக்கு: விஜய் மகிழ்ச்சி! (Master Audio Launch) மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய், தனது வீட்டில் நடந்த ஐடி ரெய்டு பற்றி பேசியுள்ளார்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. இதில், மாஸ்டர் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணமும் வந்தது. ஆம், விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் விஜய்யை மேடைக்கு அழைத்தனர். மேடைக்கு வந்த விஜய் முதலில் தனது பாட்டில் வரும் வாத்திகம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினார்.
அவருடன் சாந்தணு ஆடினார். ஆனால், அனிருத் ஓரமாக நின்றுவிட்டார். வழக்கம் போல், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பி எல்லோருக்கும் வணக்கம்…
சிம்ரன்
சிம்ரன் ஜி டான்ஸ் ஆடியதற்காக நன்றி. உங்களுக்கு அவசியம் இல்லை. இருந்தாலும், எங்களுக்காக வந்து டான்ஸ் ஆடியிருக்கீங்க.
சாண்டி, உள்பட இன்னும் சிலர் பசங்க எல்லோருமே டான்ஸ் ஆடியிருக்கீங்க. உங்கள் அனைவருக்குமே நன்றி…
ஏமாற்றமும், வருத்தமும்:பிகில்
ரசிகர்கள் எல்லோருக்குமே ஏமாற்றமும், வருத்தமும் இருக்கும் என்று எனக்கு தெரியும். பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வெளியில் நடந்த சம்பவம் தான் தற்போது மிகவும் எளிமையாக நடப்பதற்கு காரணம்.
அரைமனதுடன் தான் நான் ஏற்றுக்கொண்டேன். முழுமனதுடன் இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அனிருத்தும், நானும் கத்திக்குப் பிறகு இணைந்துள்ளோம். பாடல் சூப்பர்…ஒவ்வொரு பாடலுக்குப் பிறகு ஒரு குட்டி ஸ்டோரி இருக்கிறது.
விஜய் சேதுபதி
தவிர்க்க முடியாத தமிழ் சினிமாவில் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால், அது விஜய் சேதுபதி தான். ஏன் வில்லனாக நடிக்கிறீங்க என்று கேட்டேன்.
அதற்கு மிகவும் எளிமையாக என்னை ஆப் செய்ய வேண்டும் என்பதற்காகவே எனக்கு உங்கலை பிடிக்கும் சார் என்று சொல்லிவிட்டார். பேரில் மட்டும் இல்லை மனதிலேயும் இடம் கொடுத்திருக்கிறார்.
மாளவிகா மோகனன்
தமிழ் மட்டும் ஓகே என்றால், தமிழில் முன்னணி நடிகை மாளவிகா மோகனன். ஆண்ட்ரியா கதை தேர்வு சூப்பர். அவருக்கு டீம் சார்பில் ஒரு வேண்டுகோள்.
இனி வரும் காலங்களில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். சாந்தணுவிற்கும் அப்படித்தான். அவரும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும்.
இப்படி தனித்தனியாக பேசுவதற்குப் பதிலாக, அவர்களது வேலையே படத்தில் பேசும். அந்தளவிற்கு ஒவ்வொருவரது உழைப்பும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ளது.
சேவியர் பிரிட்டோ
செந்தூர் பாண்டி, தேவா ஆகியவற்றிற்கு பக்கபலமாக என்னுடைய மாமா இருந்தார். மாஸ்டர் படம் எல்லாமே எனது மாமா சேவியர் பிரிட்டோவிற்குதான்.
லோகேஷ் கனகராஜ்
அடுத்து லோகேஷ் கனகராஜ்…மாநகரம் திரும்பி பார்க்க வைத்தார். கைதியை திரும்ப திரும்ப பார்க்க வைத்தார். முதலில் ஒரு வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு குறும்படம்.
கையில் சீன் பேப்பரே இருக்காது. அவங்க அந்த டயலாக் பேசுவாங்க. நீங்க இந்த டயலாக் பேசணும். அப்படி சொல்வார். யோவ் என்னய்யா சொல்லுர என்றேன்.
சீன பேப்பர் கொடுக்கவே மாட்டார். ஒருநாள் மன உளைச்சலுக்கே ஆளாகிவிட்டேன். இவன் கூட எப்படி 4 மாசம் ஒர்க் பண்ணப்போறோம் என்ற கவலை வந்துவிட்டது.
இந்த மாதிரி அந்த மாதிரி எந்த மாதிரியும் வேண்டாம். முதலில், சீன் பேப்பரை கொடு என்றேன். அதன் பிறகுதான் சீன் பேப்பரை கொண்டு வந்து சார், சீன் பேப்பர் சார், சார் சீன் பேப்பர் சார் என்றார்.
ஓட்டுறானா கிண்டல் பண்ணுறானா என்றே தெரியாது. வாழ்க்கையில், ஹார்டு ஒர்க், ஸ்மார்ட் ஒர்க், இரண்டும் இருந்தால், சீக்கிரமே சக்சஸ்தான். டீச்சர்ஸ், புரோபசர்ஸ் கேங், அர்ஜூன் தாஸ் கேங், பூவையார் அண்ட் கேங், என்று எல்லோருக்கும் நன்றி. கடைசியாக ஒரு ஸ்டோரி…
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே.. நீ நதிபோல ஓடிக்கொண்டிரு…வாழ்க்கையும் ஒரு நதி போலத்தான். நதி அதுபாதையில் அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்.
சிலர் அதில் விளக்குகளை விட்டு வணங்குவார்கள்.
சிலர், பூக்களை தூவி வழிபடுவார்கள்.
இன்னும் சிலர், அதில் கல்லை எறிந்து வழிபடுவார்கள்.
ஆனாலும், நதி அதுபாட்டுக்கு அதுபாதையில் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.
அதுபோல நாமும் ஓடிக்கொண்டே இருப்போம். வாழ்க்கையில், பிடித்தவர்களும் இருப்பார்கள், பிடிக்காதவர்களும் இருப்பார்கள்.
அவர்கள் அவங்கபாட்டுக்கு இருந்துட்டு போகட்டும்.
நாம், நம்ம வேலையை, கடமையை செம்மையாக செய்துகொண்டே நதிபோன்று போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
உண்மையாக இருக்க வேண்டுமென்றால், ஊமையாக இருக்க வேண்டியிருக்கிறது…போதும் ஆளவிடுங்கப்பா என்று கூறி கதையை முடித்தார்.
அவரிடம் பாவனா மற்றும் ஆர்ஜே விஜய் ஆகியோர் கேள்வி எழுப்பினர். உங்களது உடைக்கான காரணம் என்ன? அதற்கு காஸ்டியூமர் பல்லவிதான் என்றார்.
அஜித் பற்றி பேசிய விஜய்
அதன் பிறகு நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படி வந்ததாக கூறினார்.
ரெய்டும் ஜாலியா இருக்கு
நெய்வேலியில் படப்பிடிப்பின் போது உங்களுக்காக ரசிகர்கள் வந்தார்களே! அந்த தருணம் எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றார். வேற லெவல் நீங்க…ரெய்டும் ஜாலியா இருக்கு…
விஜய் சேதுபதிக்கு விஜய் முத்தம்
இறுதியில், விஜய் சேதுபதி தனக்கு கொடுத்த முத்தத்தை திருப்பி அவருக்கே கொடுத்துள்ளார் விஜய்.
ஆம், மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று விஜய் சேதுபதிக்கு விஜய் முத்தம் கொடுத்துள்ளார். தொடர்ந்து இசை வெளியீடும் சிறப்பாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.