Home சினிமா கோலிவுட் கோலிவுட்டின் கிங் தளபதி விஜய்: #VijayTheMasterOfKw!

கோலிவுட்டின் கிங் தளபதி விஜய்: #VijayTheMasterOfKw!

284
0
Vijay Kollywood King

Thalapathy Vijay Kollywood King; கோலிவுட்டின் கிங் மாஸ்டர் விஜய்: #VijayTheMasterOfKw! தளபதி விஜய் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்து வரும் நிலையில், தற்போது VijayTheMasterOfKw என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் என்று கூறும் VijayTheMasterOfKw என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரது வரிசையில் இடம்பெற்றிருப்பவர் தளபதி விஜய். ரஜினி, கமலை ஆகியோரைத் தொடர்ந்து அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் தளபதி விஜய் முதலிடத்தில் இருக்கிறார்.

விஜய்யை பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும், சாம்ராட் என்றும், கோலிவுட் கிங் என்றும் சோஷியல் மீடியா கிங் என்றும், டிஆர்பி கிங் என்றும் அழைக்கின்றனர்.

விஜய் என்றால், மாஸ், க்யூட், அமைதியான கதாபாத்திரம், வசூல் மன்னன், ரசிகர்களுக்கு நல்லவொரு சகோதரர், தனது அழகான முகத்தை வைத்துக் கொண்டு எப்போதும் சமூக பிரச்சனைகள் குறித்து குரல் கொடுப்பவர் என்றெல்லாம் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு அண்ணனாக இருக்கிறார். எப்போது, அண்ணா அண்ணா என்றே ரசிகர்கள் தளபதி விஜய்யை அழைக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும், ரசிகர்களின் இதயங்களிலும் குடி கொண்டுள்ளார்.

தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறார். தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். வருங்கால முதல்வர் என்றும் அழைக்கின்றனர்.

அண்மையில், விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால், அப்போது, தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டும்.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தனது ரசிகர்களை கேட்டுகொண்டார்.

விஜய் நடித்த தெறி, சர்கார், மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் குவித்துள்ளது.

இந்த நிலையில், #VijayTheMasterOfKw என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. தற்போது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விரைவில், இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், விஜய் தான் கோலிவுட் மாஸ்டர் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகவர்ச்சி நடிகை நமீதா பா.ஜ.க வின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம்
Next articleதளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் கோலிவுட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here