கவுதம் காம்பீர்; ரோஹித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு தோனி ஒரு முக்கிய காரணம். ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழக்கையில் தோனியின் பங்களிப்பு முக்கியமான ஒன்று.
ரோஹித் சர்மாவின் இத்தகைய கிரிக்கெட் வளர்ச்சிக்கான புகழ் தோனியை சேரும் என இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்களும் அதிகபட்ச ஸ்கோரான 264 மற்றும் 4 முறை ஐபிஎல் கோப்பை என வென்ற திறமையும் நுணுக்கங்களும் கொண்ட வீரர் தான் ரோஹித் சர்மா.
ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழக்கையை பார்க்கும் பொழுது அதை இரண்டாக பிரிக்கலாம். ரோஹித் மிடில் ஆர்டர் ஆடிய பொழுது அவர் இருக்கும் இடமே யாருக்கும் தெரியாது.
அவரை அணியில் சேர்ப்பதற்காக சச்சின், சேவாக் மற்றும் கம்பீர் ஆகியோரை சுழற்சி முறையில் களமிறக்கிய முன்னாள் கேப்டன் தோனி பெரிய விமர்சனத்தில் சிக்கினார்.
பிறகு இப்படியே சென்ற ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் அவரின் திறமைக்கேற்ற வரவேற்பு கிடைக்கவில்லையே எனலாம்.
2013ஆம் ஆண்டு திடீரென யாருமே எதிர்பாக்காத தருணத்தில் மினி உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவை ஒபேணிங்க் செய்ய தோனி பரிந்துரைத்தார்.
அன்று தொடங்கிய ரோஹித் சர்மாவின் ரன் வேட்டை இன்று வரை ராஜ ஆட்டம் ஆடி வருகிறது. அதன் பிறகு அவரின் உண்மை திறமை உலகிற்கு தெரிந்தது.
இவ்வாறு இக்கட்டான சூழ்நிலையில் தோனியின் ஆதரவும் சரியான முடிவும் தான் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழக்கையில் உந்துக்கோளாக அமைந்தது.