Home நிகழ்வுகள் தமிழகம் இன்று சென்னையில் 203 பேருக்கு கொரோனா உறுதி

இன்று சென்னையில் 203 பேருக்கு கொரோனா உறுதி

234
0
இன்று சென்னையில் 203 பேருக்கு கொரோனா உறுதி

இன்று சென்னையில் 203 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உறுதிசெய்யப்பட்ட கொரோனா தோற்று எண்ணிக்கை 266 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு:

கொரோனா எனும் கொடூரன் :

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக உலகமே போராட்டக்களம் கண்டுகொண்டிருக்கின்றது. கண்ணுக்கு தெரியாத இந்த சிறிய எதிரி உண்டாக்கும் இழப்புகள் பேரிழப்புகளாவே உள்ளன.

அனைத்து நாடுகளுமே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றன. இந்தியாவிலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இருப்பினும் கொரோனாவை முழுமையாக ஒழிப்பதற்கு வழிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நாளை முதல் தளர்வுகள் :

தமிழ்நாட்டில் நாளை முதல் 3-ம் கட்ட ஊரடங்கு அமலில் வரும் நிலையில் சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொற்றுக்கு உள்ளானார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது.

தமிழ்நாட்டில் இன்று :

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை நோய் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது.

38 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13. ஒருவர் உயிரிழந்தததால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான விவரம் :

சென்னை 203, தென்காசி 2, அரியலூர் 2, கடலூர் 9, கன்னியாகுமரி 1, திருவள்ளூர் 2, விழுப்புரம் 33, கள்ளக்குறிச்சி 6, திருவண்ணாமலை 1, மதுரை 1, கோயம்பத்தூர் 4, செங்கல்பட்டு 2,

இதுவரை பதிவான முடிவுகள் :

இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 37,206 ஆக உள்ளது.

இதுவரை சோதனை செய்யப்பட்ட சோதனை மாத்திரைகளின் எண்ணிக்கை 1,50,107.

நாமே நமக்கு பாதுகாப்பு :

இந்த உயர்ந்துகொண்டே வரும் நோய் தொற்றுகளின் எண்ணிக்கை மக்களின் ஒத்துழைப்பை இன்னும் அதிக அளவில் வழங்க வேண்டும் என்பதையே நமக்கு உணர்த்துகின்றது.

நாளை முதல் தளர்வுகளுடன் கடைகள், தொழிற்ச்சாலைகள் துவங்க உள்ள நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அரசின் அறிவுறுத்தல்கள் படி நடந்தால் மட்டுமே தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

 தனித்திருப்போம்!                   தற்காத்துக்கொள்வோம்!
 விலகியிருப்போம்!
 வெற்றிகாண்போம்!

Previous articleகவுதம் காம்பீர்; ரோஹித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு தோனி ஒரு முக்கிய காரணம்
Next articleகொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 40000-ஐ நெருங்குகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here