நியுயார்க்: பிரிட்டன், சீனா மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு உல்க நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடித்து வரும் நிலையில், நாங்கள் 2021 இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிடுவோம் என அமெரிக்காவின் முன்னனி தொற்று நோய் நிபுனர் டி. ஆண்டனி ஃபாசி தெரிவித்தார்.
இலட்சக்கணக்கில் மருந்துகளை கேட்டுள்ள பணக்கார நாடுகள்
குறிப்பிட்ட பணக்கார நாடுகள் ஏற்கனவே இந்த மருந்தை தங்களிடம் இலட்சக்கணக்கில் கேட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
உதாரனத்திற்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவைற்கான மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுவரும் ஆஸ்ட்ராசெனேகா(AstraZeneca) என்னும் நிறுவனத்தை எதிர் நோக்கியுள்ளன.
ஆஸ்ட்ராசெனேகா நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்
இந்த ஆஸ்ட்ராசெனேகா நிறுவனம் இந்தியாவின் சீரம் கழகத்தில் 1 பில்லியன் அளவிற்கு தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.
தடுப்பூசிகளுக்கான வழிகாட்டுதல்கள் உலக சுகாதார நிறுவனத்தால் வகுக்கப்படும் என தெரிகிறது.