இந்தியா தொடர் தோல்விக்கு காரணம் வேற யாரும் இல்ல இவங்கதான்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஒரு நாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கிலும் வென்றது.
இதுவரை சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி திடீரென தொடர்ச்சியாக இரண்டு தொடரை தோற்றதற்கு காரணம் யார் என்ற கேள்வி எழுந்தது.
ஆஸ்திரேலியா அணி அனுபவ வீரர்களான ஸ்மித், வார்னர் இல்லாத காரணத்தால் கடந்த ஒரு வருடமாக மிகுந்த தடுமாற்றத்தை சந்தித்து வந்தது.
ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா அணி அனைத்து தொடரையும் கைப்பற்றி விட்டு தன் சொந்த மண்ணில் தோற்றதற்கு காரணம் என்ன?
பொதுவாக ஒரு அணிக்கு 11 வீரர்களும் 5 மாற்று வீரர்களும் தேவை. இந்த தொடரில் இந்திய அணியில் 11 வீரர்கள் தேர்வு செய்வதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.
உலகக் கோப்பைக்கு சிறந்த அணி தேர்வு செய்கிறோம் என்ற பெயரில் இஷ்டத்திற்கு வீரர்களை மாற்றி மாற்றி எடுத்து இடத்தை மாற்றி இறக்கி பெரிய சிக்கலை ஏற்படுத்தினர்.
கடைசி இரண்டு போட்டிகளில் எதற்கு தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரிசப் பாண்ட் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே தோனி மிகக் குறைந்த சர்வதேச போட்டிகளே ஆடி வருகிறார்.
நான்காவ்து போட்டியில் தோனி இல்லாததால் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். விஜய் சங்கரை எந்த இடத்தில் இறக்குவது என்ற குழப்பம் இன்னும் இருந்து வருகிறது.
தவான் முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் ராயுடு சரியாக விளையாடாததால் நான்காவது போட்டியில் கழற்றிவிடப்பட்டார்.
மிடில் ஆர்டரில் நன்றாக விளையாடிய கார்த்திக் ஏன் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார் என்பதற்கான பதில் யாருமே கூறவில்லை. அவரும் தோனியும் இருந்தால் மிடில் ஆர்டர் இன்னும் பலமாக இருக்கும்.
வேகப்பந்து வீச்சாளர்களான புவி, பும்ரா, சமி ஆகியோரை எடுப்பதிலும் பிரச்சனை. யாரை எந்த போட்டியில் களம் இறக்குவது என தெரியாமல் மாற்றி மாற்றி இறக்கினர்.
விராத் கோலியும் ரவி சாஸ்த்ரியும் சரியாக அணியை தேர்வு செய்யாததே அணியின் இந்தத் தோல்விக்கு காரணமாக அமைந்தது எனக் கூறலாம்.
கடந்த 4-5 மாதங்களாக உலகக் கோப்பைக்கு அணித் தேர்வு செய்கிறோம் என்று இவர்கள் செய்த மாற்றங்கள் தான் இன்று உலகக் கோப்பைக்கு முன் நாம் சந்தித்த தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்தது.