Home நிகழ்வுகள் உலகம் 45 ஆயிரத்தை தாண்டியது அமெரிக்காவின் இறப்பு

45 ஆயிரத்தை தாண்டியது அமெரிக்காவின் இறப்பு

451
0

America corona virus: அமெரிக்காவில் கரோனா வைரஸ் காரணமாக நேற்று மட்டும் 2800 மக்கள் இறந்துள்ளனர் இதனால் அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. பல லட்சம் மக்கள் இதுவரை இறந்துள்ளனர்.

உலகமெங்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்தியாவையும் கரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. நாளுக்குநாள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, சீனா, இத்தாலி போன்ற நாடுகள் பயங்கர இழப்புகளை சந்தித்து வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா நாளுக்கு நாள் சராசரியாக 2000 மக்களை இழந்து வருகிறது.

நேற்று ஒரு நாள் மட்டும் 2800 மக்கள் இறந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது.

கொரோனா வைரஸ் காரணமாக அதிக இழப்புகளை சந்தித்த நாடு பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது.

இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார் அதிபர் டிரம்ப். இதுவரை உலகமெங்கும் கருணா வைரசால் 2556554 பாதிக்கப்பட்டுள்ளனர். உலகமெங்கும் இதுவரை 177613 இறந்துள்ளனர்.

அமெரிக்கா 45318, ஸ்பெயின் 21282, இத்தாலி 24648, பிரான்ஸ் 20796, ஜெர்மனி 5086 இறந்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் இந்த நாடுகள் உள்ளன.

Previous articleஇந்தியாவில் கொரோனா ஊரடங்கு தகவல்கள்
Next articleஅயலானுக்கு போட்டியாக வரும் தளபதி விஜய்யின் மாஸ்டர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here