காற்று மாசில் இருந்து விடுபட சுவாசப்பயிற்சி
இன்றையக் காலக்கட்டதில் காற்று மாசுபாடு என்பது பழகிப்போன ஒன்றாகி விட்டது. எங்கு சென்றாலும் புகை, தூசு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளின் துர்நாற்றம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது.
சுத்தமான காற்று காசு கொடுத்தாலும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்துமா, எரிச்சலுடன் கூடிய இருமல் போன்ற பல்வேறு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
சுவாசப்பயிற்சியின் பலன்கள்
அதிகமான ஆக்ஸிஜன் நுரையீரலை சென்றடைவதற்கு சுவாசப்பயிற்சி உதவி செய்கிறது. ஆக்ஸிஜன் மட்டுமே செல்வதால் எரிச்சல் இல்லாமல் சுவாசிக்கலாம்.
மாசற்ற காற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரலை சுத்தம் செய்வதற்கு ஒரு எளிய வழியாக அமைகிறது. நுரையீரலில் இருக்கும் மாசுள்ள கார்பன்டை ஆக்சைடு முழுவதையும் வெளியேற்ற உதவுகிறது.
சுவாசப்பயிற்சி செய்யும் முறை
வழக்கம்போல் சம்மணம் கட்டி உட்கார்ந்து கைகளை முழங்காலில் படும்படி வைத்துக்கொள்ளவும். அதாவது முனிவர் தவம் செய்யும் பொழுது உட்காருவது போல.
பிறகு, மூக்கு வழியாக காற்றை உள்ளே இழுத்து வாய் வழியாக காற்றை வெளியே விடவும். காற்றை மிகவும் மெதுவாக வெளியே விடவும். அதாவது நுரையீரல் உள்ளே இருக்கும் காற்று முழுவதுமாக வெளியேறும்படி.
உடலின் உள்ளே எந்த விதக் காற்றும் இல்லை என்று நீங்கள் உணரும் வரை ஹ.. ஹ… என்று மெதுவாகக் காற்றை வெளியேற்றவும்.
காற்றை உள்ளிழுக்கும் பொழுது 6 வினாடிகள் நிறுத்தி வைத்து பிறகே வெளியேற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் நுரையீரலில் உள்ளே இருக்கும் மாசுள்ள காற்றை வெளியேற்றி தூய்மைப்படுத்தலாம்.