Home நிகழ்வுகள் இந்தியா அதிர்ச்சி ரிப்போர்ட் : கொரோனா வைரஸ் எத்தனை நாள் வாழும்

அதிர்ச்சி ரிப்போர்ட் : கொரோனா வைரஸ் எத்தனை நாள் வாழும்

1
2219

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகில் பல்லாரயிரம் மக்களை கொன்றுள்ளது. இந்த கொரோனா வைரஸ் எத்தனை நாள் உயிர் வாழும்? Corona virus Life Time.

குறிப்பாக சீனா இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நோய் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

இந்தியாவில் அதிக முன்னெச்சரிக்கை எடுத்து மக்களை காப்பாற்றுவது என மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

இன்று அதாவது மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டுள்ள.

மக்கள் சுய ஊரடங்கு என்ற பெயரில் மக்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளியேறும் இருமல் தும்மல் மூக்கிலிருந்து வெளியேறும் நீர் போன்ற சில உபாதைகளால் இந்த வைரஸ் மற்றவர்களையும் பாதிக்கும்.

மக்கள் யாரும் சில நாட்களுக்கு முக்கியத் தேவைக்கு மட்டும் வெளியில் வந்து மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருப்பது பாதுகாப்பாக இருக்கும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் எத்தனை நாள் உயிர் வாழும்?

corona virus life circle 

*பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் 2-6 நாட்கள்
* ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 2-4 நாட்கள்
* அட்டைப்பெட்டியில் 24 மணி நேரம்
* தாமிரத்தில் 4 மணி நேரம்
* காற்றில் 3 மணி நேரம்
* அலுமினியத்தில் 2 – 8 மணி நேரம்
* காகிதத்தில் 4 நாட்கள்
* மரப் பொருட்களில் 4 நாட்கள்
* கண்ணாடி பொருள்களில் 5 நாட்கள்

மக்கள் அனைவரும் மற்றவர்களிடம் பேசும் போதும் நிற்கும் போதும் ஒரு மீட்டர் தூரமாவது இடைவெளிவிட்டு நின்று பேச வேண்டும்.

சாப்பிடும்போதும் வெளியில் சென்றாலும் கையை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். வெளியில் செல்லும் தேவை இருந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்லவும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here