இரவு நேர டாக்டர்கள்: ஆய்வில் வெளிவந்த உண்மை!
இன்றைய காலகட்டத்தில் கார்பரேட் நிறுவனங்களில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் பகல் மற்றும் இரவு என மாறி மாறி தங்களுடைய ஊக்கத்திற்கு ஏற்ப வேலை செய்கின்றனர்.
பெய்ஜிங் நகரத்தில் நடந்த சோதனையில், இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் உடலில் டிஎன்ஏ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், கேன்சர் ஏற்படுவதற்கான வாய்ப்பும், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது என அந்த ஆய்வின் தகவல்கள் கூறுகின்றன.
இரவு, பகல் வேலை செய்யும் 49 மருத்துவர்களின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வு செய்தபோது, இரவு முழுவதும் வேலை செய்யும் மருத்துவர்களின் உடலில் சில குறைபாடுகள் இருந்தன.
இரவு முழுவதும் வேலை செய்யும் மருத்துவர்களின் உடலில் டிஎன்ஏவை சரி செய்யும் ஜீன்கள் மிகவும் குறைவாகவும், டிஎன்ஏ பாதிப்பு அதிகமாகவும் இருந்ததுள்ளது.
பகலில் வேலை செய்யும் மருத்துவர்களின் உடல்நிலை இதற்கு எதிர்மாறாக இருந்தது. ஒவ்வொரு இரவும் இவர்கள் தூக்கம் விழித்து வேலை செய்யும் பொழுது டிஎன்ஏ பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
டிஎன்ஏ பாதிப்பால் கேன்சர், இதயம் தொடர்பான நோய்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பியல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.