அக்கா அருகில் இக்கா: லீக் ஆனதால் படபடப்பான மம்முட்டி!
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மதுரராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். முறுக்கு மீசையுடன் அரசியல்வாதி தோற்றத்தில் போஸ்டர் வெளியானது.
அடுத்த சில நாட்களிலேயே, அதே சோபாவில் சன்னிலியோனுடன் அருகில் அமர்ந்து இருந்த புகைப்படம் வெளியானது.
அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் அஜூ வர்கிசி, அக்கா அருகில் இக்கா என கேப்சனுடன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். அக்கா அருகில் அண்ணன் என்று பொருள் .
ஆனால், வெளியாகிய முதல் இரண்டு நாட்கள் பெரிய அளவில் வைரல் இல்லை. புகைப்படம் லீக் ஆனதால் மம்முட்டி படபடப்பு என்றெல்லாம் செய்திகள் வெளியானது.
கேரளாவைத் தவிர பெரிய அளவில் வைரல் இல்லை. திடிரென புகைப்படத்தை முகநூலில் காணவில்லை என செய்தி வெளியானது.
அதன்பிறகே, பலர் இந்தப் புகைப்படத்தை கூகுளில் தேடி உள்ளனர். மேலும் சன்னி ரசிகர்கள் மீம் கிரியேட் செய்து பப்ளிசிட்டி தேடிக்கொடுத்து விட்டனர்.
அஜூ வர்கிசியின் இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கங்களில் புகைப்படம் தொடர்ந்து இருக்கிறது. ஆனால் முகநூலில் மட்டும் எப்படி நீக்கப்பட்டு இருக்கும் எனக் கேள்வி எழுந்தது.
தற்பொழுது மொபைல் ஹேக், போட்டோ லீக்ஸ் என ட்ரெண்ட் செய்து பப்ளிசிட்டி தேடுவது சாதாரணமாகிவிட்டது.
மதுரராஜா படத்தில் மம்மூட்டி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். சன்னி லியோனின் முதல் மலையாள படம் இதுவாகும்.
ஏற்கனவே அரை நிர்வாண கோலத்தில் அப்பா தினத்தன்று சன்னியின் இன்ஸ்டாகிராம் பதிவேற்றம் பயங்கர விமர்சனத்துக்கு உள்ளானது. அதை மையமாகக் கொண்டே இந்தப் புகைப்படம் ட்ரோல் செய்யப்பட்டு உள்ளது.
கடை திறப்பு விழாவின்போது சன்னிலியோன், சகிலாவிற்குப் பிறகு கேரளாவை ஸ்தம்பிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.