Home நிகழ்வுகள் இந்தியா மதுபோதையில் பிரியங்கா வீடியோ: மனநோய் வேறு உள்ளதாம் – சு.சாமி

மதுபோதையில் பிரியங்கா வீடியோ: மனநோய் வேறு உள்ளதாம் – சு.சாமி

905
0
மதுபோதையில் பிரியங்கா

மதுபோதையில் பிரியங்கா வீடியோ: மனநோய் வேறு உள்ளதாம் – சு.சாமி

ராஜ்புத்சேனா, ஆதித்யநாத்துக்கு ஆதரவு, மோடி மிஷன் 2019 ஆகிய சமுகவலைத்தளப்  பக்கங்களில் ஒரு காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பிரியங்கா காந்தி குடிபோதையில் பத்திரிக்கையாளர்களைத் தரக்குறைவாக பேசுகிறார் என குறிப்பிட்டு வெளியிட்டு இருந்தனர்.

சமீபத்தில் தான், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு பதவி வழங்கினார். இந்நிலையில் பிரியங்கா மது அருந்தியுள்ளார் என்கிற வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

10 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஊடகத்தினரைப் பார்த்து உரத்த குரலில் பிரியங்கா காந்தி கத்திக் கொண்டுள்ளார்.

மேலும் அதைப்பார்க்கும்போது ஏதோ மதுபோதையில் அங்கிருந்து நகர முடியாமல் பிரியங்கா காந்தி ஆடுவதுபோல்  உள்ளது. ஆனால் அது உண்மை அல்ல.

2018-ம் ஆண்டு கத்துவா மற்றும் உனாவ் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்பு பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ அது.

இந்தியா கேட் அருகில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. ராகுல் கூட்டத்தின் மையப்பகுதிக்குச் சென்றுவிட்டார்.

ஆனால் பிரியங்கா காந்தி கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். சிலர் பிரியங்கா காந்தியை இடித்துள்ளனர்.

இதன் காரணமாகவே அவர் ஆத்திரமடைந்து அனைவரையும் தள்ளிப்போகச் சொல்லி உள்ளார். ஆனால் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடிட் செய்து போலியாக வெளியிட்டு உள்ளனர்.

இந்த வீடியோவை தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார். பிரியங்கா காந்திக்கு பைபோலர் எனும் ஆவேசப்படும் மன நோய் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

எனவே, பிரியங்கா காந்தி பொதுவாழ்வில் ஈடுபடக்கூடாது என சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here