Movie Review Jarugandi. ஜருகண்டி படம், ஆந்திரா பக்கம் போன புயல இழுத்து, சென்னை பக்கம் வுட்டுட்டாரு இயக்குனர் A.N. பிச்சுமணி. ரிவியூ பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது முழுமையாக படிக்கவும்..
பின்குறிப்பு:-
இதை படிக்கும் படக்குழு ரிவியூ எப்படி இருக்குனு ஒரு ரிவியூ குடுக்கவும்… +919092626259 என்னுடைய வாட்ஸ்ஆப் எண்ணிற்கு. இல்லன ரத்தம் கக்கி சாவிங்க…
காலைல நம்ம ஊரு திரையரங்கத்துல வேல பாக்குற நண்பருக்கு போன் போட்டேன். இந்த வாரம் என்ன புதுப்படம் வந்திருக்கு விமர்சனம் பண்ணனும்னு, ஜூனியர்னு ஒரு படம் வந்திருக்குன்னு சொன்னாப்ல.
மத்த தியேட்டர்ல போனவாரம் வந்த ‘மெட்ராஸ் கோழி‘ ரெண்டு படமும் ஓடுது. இன்னொரு தியேட்டர்ல ஜூனியர் படம் மாத்திருக்குனு சொன்னாப்ல. அது ஜூனியர் இல்ல, ஜீனியஸ்னு நான் சொன்னேன்.
நாம ரிவியூ பண்ணனும்னு நினைச்ச படத்தவே எடுத்துட்டாணுவனு ஒரே சந்தோசம். அந்த தியேட்டர்ல எப்பவும் ஒன்னத்துக்கும் ஒதவாத படமா எடுத்து ஓட்டுவாரு தியேட்டர்காரர். நம்ம ஊரு டிசைன் அப்டி.
தியேட்டர் பக்கம் போனா, டைட்டில் ‘ஜருகண்டி’ன்னு இருந்துச்சு. ஒருவேள படம் எதுவும் எடுக்கல திரும்பிப்போனு சொல்லுராகளா…. இல்ல நம்ம பய சொன்ன மாதிரி, ஆந்திரா ஜூனியர் என்.டி.ஆர் படமோன்னு நெனச்சேன்.
கொஞ்சம் மேல பாத்தா, நம்ம இளைய தளபதியாக ஆசையா இருக்குன்னு சொன்ன ஜெய் படம். அப்ப தான் தெரிஞ்சது இப்படி ஒரு படம் இன்னிக்கு ரிலீஸ் ஆயிருக்குன்னு.
தியேட்டர்காரர் மேல சுத்தமா நம்பிக்கை இல்ல. இருந்தாலும், கண்கள் இரண்டால் பாட்டுல சலிக்காம பாத்த நம்ம ஜெய் பய தான நடிச்சிருக்காப்ளனு, நம்ம தாடிவாலாவுக்கும்.. எனக்கும் சேர்த்து ரெண்டு டிக்கெட் எடுத்துட்டோம்.
வேற வழி… 20 கிலோமீட்டர் ட்ராவல். மழை வேற தூறுது. வேற எங்க போறது….
பக்கதுல மெட்ராஸ் படம் ஓடுது… அதான்பா வடசென்னை… ஆண்டிரியாவுக்காக இன்னொரு வாட்டி போலாம்னு பாத்தா, ரிவியூ போடனுமேனு… புது படத்துக்கே போயிட்டோம்…
டேய் நிருத்து…. என்னடா ஜருகண்டி திரைவிமர்சனம்.. தேசிய விருதுன்னு சொல்லிபுட்டு… உன் சொந்த கதையை அடிச்சி விட்றனு கேக்குறீங்களா? அத விட இத படிக்க சுவாரஸ்யமா இருக்கும் அதான்….
சரி படத்த பத்தி சொல்லுறேன்…
தேசிய விருது கெடைக்க வேண்டிய படத்த… நிதின் சத்யா பய கெடுத்து வச்சிட்டாப்ல… நா என்னத்த சொல்ல…
நடிக்கிற வேல இல்லன்னு… நம்ம நிதின் சத்யா படத்த தயாரிக்க வந்துட்டாப்ல.. அவரு தான் தயாரிப்பாளராம். கூகிள் ஜி பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்.
ஓப்பன் பண்ணா ஜெய் வாய்ஸ்… என் பேர் சத்யானு, நம்ம நிதின் சத்யாவ காட்டுனாங்க.. ஏழு குண்டலவாடா இதென்ன மதுரைக்கு வந்த சோதனை…
ஜெய் டப்பிங் பேச… நம்ம நிதின் சத்யாவே நடிச்சிட்டாரோனு ஒரு ஷாக்… கேமரா அப்டியே ஜெய் பக்கம் திரும்பிச்சு… இப்ப தான் கொஞ்சம் நிம்மதி…
ஏன்னா… டைட்டில் கார்டுல போட்ட மியூசிக் அப்டி.. கொஞ்சம் விட்டா ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். பக்கத்துல இருந்த தாடிவாலாட்ட சொன்னேன்.. ரெண்டு சத்யாடா படத்துலன்னு..
சொன்னது தான் தாமதம்… அத்தோட நிதின் சத்யாவ காணோம். படம் எடுக்க காசு பத்தலபோல, அநியாயத்துக்கு ரூம் குள்ளவே ஷூட்டிங்….
ஷாட் ஓகேவோ? இல்லையோ? ஜருகண்டி… ஜருகண்டின்னு… டேக் வாங்காம, அடுத்தடுத்த ஷாட்ன்னு, போயிட்டே இருக்காப்ல டைரக்டர் பிச்சுமணி.
பட்ஜெட் பிராப்ளம்னு பாத்தா, அப்புறம் தான் புரியுது… பட்ஜெட்டே ப்ராப்ளம்னு. ஷார்ட் பிலிம் எடுக்க வச்சிருந்த காச வச்சு, பியூச்சர் பிலிம் எடுத்திருகாரு போல நிதின்.
பக்கத்துல இருக்க தாடிவாலா, மொக்க போடுதுன்னு பாத்தா… படத்துல நம்ம டேனி தாடிவால தொல்ல தாங்க முடியல. ரோபோ ஷங்கர் வர சீன்ல தான் ஏதோ காமெடி ஒர்க்கவுட் ஆயிருக்கு.
நம்ம மொட்டை… போபோ சஷி போட்ட மியூசிக் கேட்டதுமே அல்லு விட்ருச்சு. அதுக்கு இதமா ரோபோ கொஞ்சம் ஒத்தடம் கொடுத்து இருக்காப்ல.
விஜய் சேதுபதி நடிச்ச ‘நல்ல நாள் பாத்து சொல்லுறேன்’ படத்தோட மியூசிக்கு… இது எவ்ளோவோ தேவலன்னு ஒரு ஆறுதல். சும்மா 50 வருட தமிழ் சினிமால வந்த மியூசிக்க வளச்சு வளச்சு கலந்து கட்டி அடிச்சி விட்ருக்காப்ல…
மொட்ட சிவாஜி… நீ மறுபடியும், ஆந்திராவுக்கே போயிடு சிவாஜி… இசைக்கு போட்டியா சவுண்டு மிக்சிங்.. அடா..டா..டா.. மசால்வட மசால் வட தான். நல்லா டிசைன் டிசைனா வட சுட்ருக்காப்ல..
அடுத்து நம்ம கேமரா இயக்குனர், அவரு வேற ஆட்டி ஆட்டி எடுத்து கண்ண கலங்க வச்சிட்டாரு.. எப்படி கலங்க வச்சாரு பாத்திங்கள்ள..
இவ்ளோ ரண களத்துளையும், டைரக்டர் ஒரு பிட் சீன் கூட வக்கல. அதுக்காக ஒரு பாராட்டு. இருந்தாலும், அந்த ஹாஸ்பிட்டல் க்ளோஸ்அப் தவிர்த்திருந்தா…100% கிளியர் குடுத்துருக்கலாம்.
ஹீரோயின ஸ்கிரீன்ல பாத்த வரை மீ..டூ..வுக்கான அறிகுறி எதுவும் தெரியல. இருந்தாலும், சேப்டிக்கு ஒரு வீடியோ ரெக்கார்ட் எடுத்து வச்சிக்கங்க. நாள பின்ன.. பெரிய ஆள் ஆயிட்டா, உங்கள வச்சி செஞ்சிடப்போவுது…
எல்லாத்துக்கும் காரணம், நிதின் சத்யா. அவரு நடிக்காம, நண்பர் ஜெய்ய நடிக்க வச்சு அழகு பாத்துருக்காருன்னு பாத்தா, ஜெய்கு இருந்த மார்கெட்டவும் இறக்கி விட்டுட்டாப்ல.
படம் பாத்து முடிச்சிட்டு, ரிவியூ எழுதுறதுக்கு முன்ன.. படத்தோட காஸ்ட் அன் குரூவ் பத்தி, கூகுள்… டிவிட்டர்னு ஆராய்ச்சி பண்ணேன்.
நிதின் சத்யா மற்றும் இயக்குனர் ட்விட்டர் பக்கத்த ஆராய்ச்சி செஞ்சப்போ…
இயக்குனர் பீம்ஜி, அதான்பா பா.ரஞ்சித் ஒரு ட்விட் பண்ணிருக்காரு. பாசமிகு நண்பன் பிச்சுமணி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’னு ஒரு ட்வீட் போட்ருக்காப்ல.
அடடா… பா.ரஞ்சித் மாதிரி வர வேண்டிய பிச்சுமணிய, ஏலம் விட்ற வடிவேலு பிச்சுமணியா மாத்திடிங்களே சத்யா… பட்ஜெட் இல்லததால தேசியவிருது மிஸ் ஆயிட்டு. பாவம் நம்ம பிச்சு…
அப்புறம் ஒரு ட்விட், பிரின்ஸ் ராசன் ஒருத்தர்… சம்பளமும் கொடுத்து நடிக்கவும் வச்சதுக்கு நன்றின்னு போட்ருந்தாப்ல. படத்துல ஜெய்யவும், ஹீரோயினவும் தவற… மத்த எல்லாருமே கெஸ்ட்ரோல் தான்…
இந்த பிரின்ஸ் ராசன் எப்போ வந்தாரு.. எப்போ போனாருன்னு தெரியல. இருந்தாலும் சம்பளம் கிடைச்சதுன்னு சொன்னதும் பெரிய ஆச்சரியமா இருந்தது.
நிதின் சத்யா.. உண்மையாவே உங்க படத்தோட பட்ஜெட் எவ்ளோ? எனக்கு ஒரே டவுட்டா இருக்கு. உங்க பணம் எவ்ளோ? பத்ரி கஸ்தூரி பணம் எவ்ளோ?
உண்மையாவே ஆர்டிஸ்ட் பாராட்டுற அளவு தயாரிப்புன்னா… அதுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.. ஏன்னா அம்புட்டு பேரும்.. படம் முடிஞ்சதும்.. பேமென்ட் வரலன்னு கழுவி கழுவி ஊத்துவானுங்க.. யூவார் கிரேட்..
சுரேஷ் சந்திரா பி.ஆர்.ஓ. பண்ணியும் வியாழகிழம ஏன் படத்த ரிலீஸ் பண்ணல? சென்டிமென்ட்டா விசுவாசம் போஸ்டர… உங்க படத்தோட இடைவேளைல வுட்ருந்தா… கூட்டம் அள்ளிருக்குமே!!!
ஒருவேளை.. இளைய தளபதி ஜெய் ஒத்துகலையோ… விஜய் மேல காண்ட… அட்லீ மேல காண்டன்னு தெரியல.. மூன்று முகம் ரஜினி போலீஸ், மெர்சல் விஜய் போலீஸ்னு கலாய்ச்சுருக்காப்ல.
ஏப்பா சுட்லீ, நீ பேரு வாங்கிக்கொடுத்த ஜெய்யே… சுடாத பழமா? சுட்ட பழமான்னு? காட்டிக் குடுத்துட்டாரேப்பா… அடுத்த படத்துக்கு, எத்தன பேர் புட்டேஜ் ரெடி பண்ணி, டீல் பேச போறானுங்களோ!!!
இத மொக்க படம்னு சொன்னா.. இதவிட மொக்க படங்களுக்கு கவுரவ குறைச்சல் ஆயிடும். அதனால இத ஒரு ஸ்டெப் மேல விட்ருவோம்…
இதுவர இவ்ளோ பெருசா… எந்த படத்துக்கும் ரிவியூ எழுதுனது இல்ல.. இதுக்கு மட்டும் ஏன்டா இவ்ளோ பெருசா எழுதி வெறுப்பேத்துறன்னு… வாசகர்கள் டென்சனாக வேண்டாம்.. இது உங்களுக்கு எழுதுனது இல்ல..
இந்த மாதிரி படம் எடுக்குற படக்குழு… படிச்சிட்டு மண்டைய பிச்சிக்கணும்னு எழுதுனது… எவ்ளோ நாள் தான் இவங்க படத்த பாத்து நம்ம மண்டய பிச்சிக்கிறது.. ஒரு சேஞ்சுக்கு ரிவியூங்கிற பேர்ல டார்ச்சர் பண்ணுவோம்….
பின்குறிப்பு:-
இதை படிக்கும் படக்குழு ரிவியூ எப்படி இருக்குனு ஒரு ரிவியூ குடுக்கவும்… +919092626259 என்னுடைய வாட்ஸ்ஆப் எண்ணிற்கு. இல்லன ரத்தம் கக்கி சாவிங்க…