Movie Review Sathru: சத்ரு திரைவிமர்சனம்
வழக்கமான ஒரு போலீஸ் கதை தான். கிட்னாப்பிங் கும்பலை கண்டறிந்து போலீஸ் கதிர் எப்படி கொள்கின்றார் என்பதே கதை.
படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். கெத்தான வில்லன் என காட்டிவிட்டு அடுத்த சீனிலேயே போலீஸ் அருகில் வந்தால் வில்லன் உச்சா போகின்றார்.
ரஜினிக்கு பேட்ட படத்தில் போட்ட தீம் மியூசிக் இந்த படத்தின் வில்லன் வரும்போதெல்லாம் மியூசிக் டைரக்டர் தீட்டு தீட்டு என தீட்டுகிறார்.
வில்லன் மேல் அப்படி என்ன அலாதி பிரியம் எனத் தெரியவில்லை. போலீஸ் கதிர் அவரு சாதாரண போலீஸ் இல்ல.
பொறக்கும்போதே அப்டி. இப்டி என ஓவர் பில்டப். ஆனால் அவருக்கோ போலீஸ் பிட்னஸ் உடல் இல்லை.
குறுக்குல இருக்க சதை தெரியக்கூடாது என சட்டையை டிக்கியில் இழுத்துவிட்டு மறைத்துள்ளார்.
போலீஸ் ட்ரஸ் போட்ட மட்டும் பத்தாது அதுக்கான பாடி லாங்குவேஜ் இருக்கணும். ஆனா இவருக்கு பாடி மட்டும் தான் பெருத்து போயிருக்கு.
ஒளிப்பதிவாளர் குறைகள் தெரியக்கூடாது என டிஐ பண்ணி உள்ளனர். படத்தில் இரவுக் காட்சி எது பகல் காட்சி எது என்றே தெரியவில்லை.
நல்ல இருக்குயா உங்க ஒளிப்பதிவு. மொத்ததுல டிரைக்டர் தன்னோட கற்பனை வளத்தை எல்லாம் கொட்டி மிகவும் மோசம் இல்லாமல் ஒரு படத்தை எடுத்துட்டாப்லா.
ஆனா நமக்கு இப்படிப்பட்ட படங்கள் எல்லாம் அரத்த பழசு என்பதால் பெரிய விசயமாக தோன்றவில்லை.
மொத்ததுல சத்ரு சப்ப குரு