கூகிள் டூடுல்: உலகளாவிய வலையின் (World Wide Web) 30ஆம் ஆண்டு
உலகளாவிய வலையின் (World Wide Web) 30ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கூகிள் டூடுல் (Google Doodle).
1989ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் ஆய்வாளர் டிம் பெர்னார் லீ ஐரோப்பாவில் இருக்கும் செர்ன்(CERN) என்ற ஆய்வகத்தில் ஒரு புதிய கருத்தை முன் வைக்கிறார்.
அதில் அவர் அதிகப்படியான ஐபர்டெக்ஸ்ட் டேட்டாக்களை சேமிக்கலாம் என்றும் ஒன்றன் பின் ஒன்றாக அதைப் பயன்படுத்தலாம் என்றும் விவரித்தார்.
மேலும் அவர் ஒரு பக்கதிற்கான கோட் வோர்ட்டை கிளிக் செய்தால் அதற்கு உகந்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் விளக்குகிறார்.
இதுவே அனைத்து இணைய தளத்திற்கும் ஒரு முன்னோடி ஆக இருக்கும் உலகளாவிய இணையின் (World Wide Web) கண்டுபிடிப்பாகும்.நாம் இன்று பயன்படுத்தி வரும் 2 பில்லியன் இணயதளங்களின் தொடக்கம் இதுவாகும்.
அவருடைய மேல் அதிகாரி அவருக்கு போதிய நேரம் அளித்து டிம் பெர்னர் லீயை எச்டிடிபி மாடேல், எச்டிஎம்எல் லாங்குவேஜ் போன்றைவையை பற்றி மேலும் விளக்கக் கூறினார்.
இன்றைய கூகிள் டூடில் இதை கொண்டாடுவதற்காக முன் காலத்தில் குறைந்த வேகத்தைக் கொண்ட இணையத்தில் நாம் பயன்படுத்திய கணினியை டிசைன் செய்து பெருமைப்படுத்தியுள்ளது.
இணையத்தையும் இணயதளத்தையும் குழப்ப வேண்டாம். இணையமானது 1960ஆம் ஆண்டே கண்டறியப்பட்டு விட்டது.