Home Latest News Tamil Sarkar Movie Review | Vijay | Murugadoss | Keerthi Suresh | Fictional

Sarkar Movie Review | Vijay | Murugadoss | Keerthi Suresh | Fictional

1311
0
sarkar movie review

Sarkar Movie Review | Vijay | Murugadoss | Keerthi Suresh | Fictional

விமர்சனம் வீடியோவை காண படத்தை கிளிக் செய்யவும்..

கதை ஓப்பனிங் தமிழ்நாட்டோட சி.எம்.யை லாரியை வைத்து கொலை செய்கின்றனர். அவர் இறந்துவிட்டதால் அவருடைய தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்றது.

அது விஜய்யின் தொகுதி என்பதால் ஓட்டுப்போட வெளிநாட்டிலிருந்து இந்தியா வருகின்றார்.

கத்தி படத்தில் வெளிநாடு செல்லும்முன், சமந்தா அழகில் மயங்கி, விமான டிக்கெட்டை கிழித்தது போல், வாக்குச்சாவடியில் கீர்த்தி சுரேசின் அழகில் மயங்குகின்றார்.

அந்த கேப்பில், வரலட்சுமியின் ஆட்கள், விஜய்யின் ஓட்டை நைசாக போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

கார்பரேட் கிரிமினல்கிட்டவே ஒருத்தன் வாலாட்டுனா… சும்மாவ விடுவாரு நம்ம விஜய். ஆசை ஆசையாய் ஓட்டு போடா வந்த விஜய், விரல்ல மை கூட வக்க முடியாம சோகமா வெளிய வராரு.

உலகத்தில் உள்ள ஓட்டுமொத்த சேனலும் விஜய்காக வெயிட்டிங். மை வச்ச விரல காட்டி.. கெத்தா போஸ் குடுக்க வேண்டிய விஜய்யை, முகத்துல கரி பூசி அனுப்பிட்டாங்க.

வாடிப்போன விஜய் மூஞ்ச பாத்ததும் கீர்த்தி சுரேஸ் பீல் ஆயிட்டாப்ல.  கீர்த்தி சுரேஷ் அன்பை பார்த்து, வெள்ளைக்கார பொண்ண விரட்டிவிட்டுட்டு, தமிழ் பொண்ணு கீர்த்திய பி.ஏ.வா வச்சிக்கிறாரு விஜய். அப்புறம் படிப்படியா விஜய்யின் காதலியா மாறிடுறாங்க.

தமிழ்நாட்டு ரசிகர்கள் மனதை கவரவில்லை என்றாலும், கார்பரேட் மான்ஸ்டர் விஜய் மனதை கவர்ந்து விட்டார் கீர்த்தி. கீர்த்தி நீங்க வேற லெவல்… புடிக்கிறது எல்லா ஹை கிளாஸ் தான். நோ லோகிளாஸ்..

இதுலவே ஒரு அரைமணி நேரம் போயிடுது. அடுத்து ஆனால் பறக்கும் கதையை நகர்த்துகின்றார் முருகதாஸ். அந்த வேகத்துல போனதான, கதை என்னுதுன்னு வர்றவங்கிட்ட இருந்து தப்பிக்கமுடியும்.

கோணவாய் ராதாரவியின் ஆட்கள் தான் கள்ளஓட்டு போட்டதுன்னு விஜய்யின் டெக்னிக்கல் டீம் கண்டுபிடிக்குது. எலக்சன் ரிசல்ட் வரக்கூடாது. கள்ளஓட்டு முறைகேடு நடந்திருக்குன்னு விஜய் கேஸ் போடுறாரு.

விஜய்யின் விஸ்வரூபத்தால், வரலெட்சுமியின் சி.எம். கனவு தகர்கின்றது. விஜய் தனக்குன்னு ஒரு கூட்டத்தை உருவாக்கிட்டு, பைக்கில் ஊர்வலமாக போராட செல்கின்றார்.

அப்போ, விஜய்யை போலிசை விட்டு அடித்து துவைக்கின்றார் வரலெட்சுமி. அரசியல் செய்வதில் அப்பா சரத்குமாரையும் விஞ்சிவிட்டார். சரத்குமார் உங்க பொண்ண பாத்து கத்துக்கங்க.

பழ.கருப்பையா நிஜத்துலயும் அரசியல்வாதி, படத்துலயும் அரசியல்வாதியா நடிசிருக்காரு. வருவுக்கும் விஜய்க்கும் ஏற்பட்ட மோதல, தனக்கு சாதகமா பயன்படுத்த நினைக்கிறாரு எதிர்கட்சி தலைவர் பழ.கருப்பு.

ஓட்டு போட்டுட்டு, வெளிநாட்டுல மாடல் அழகிகளோட சுத்திக்கிட்டு இருந்த விஜய், கூவம், சேரி, சாக்கடைன்னு அலையிறாரு. இப்படிலாம் அலைஞ்சா தான தலைவனாகலாம், தமிழ்நாட்டின் சி.எம். ஆகலாம்.

சேரி தொகுதி மக்கள ஒன்னு திரட்டி, ஒரே இடத்துல்ல உட்காரவச்சு, பேஸ்புக், டிவிட்டர்ல லைவ் பண்ணுது விஜய்யின் டெக்னிகல் டீம்.

கத்தி படத்துல எப்படி தண்ணிய வச்சு ஓட்டுமொத்த சென்னையையும் அலறவிட்டாரு. அதே மாதிரி, ஒரு தொகுதிய வச்சு ஓட்டு மொத்த தமிழ்நாட்டின் தலையெழுத்தவே மாத்துராரு விஜய்.

உங்களுக்கான தலைவன தேர்ந்தெடுக்கும் நேரம் வந்திடுச்சு, மக்கள் முன்ன வனம் பேச, அந்த தலைவனே நீதானப்பா மக்க செல்ல விஜய் முகத்தில் மலர்ச்சி.

மக்கள் வாய்ல இருந்து இப்படி ஒரு வார்த்தை வரணும்னு தான, இவ்ளோவும் பண்ணுனது. இப்படி ஒரு பரபரப்பான காட்சில இன்டர்வெல்.

அடுத்து நம்ம முதல்வன் படம் மாதிரி விஜய் சி.எம்.ஆனாரா? எப்படி ஆனாருங்கிறது மீதிக்கதை!

இதுவரை அரசியல்னு வந்தாலே, முதல்வன் படம் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். சர்கார் படம் அந்த நிலையை மாற்றும். அடுத்து 20 வருசத்துக்கு இந்த படத்தோட தாக்கம் இருக்கும்.

படத்துல நிறைய இடத்துல கத்தி படத்தை போன்ற திரைக்கதை அமைப்பு தென்படும். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும், ரசிகர்களுக்குள் அரசியல் தாக்கத்தை உருவாக்கும்.

விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு, இந்த படம் நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும். படத்துல மட்டும் சி.எம். ஆனா போதுமா? நிஜத்துல எப்போ சி.எம். ஆவிங்க விஜய்.

இது ஒரு பிக்ஷனல் ரிவியூ. முழுக்க முழுக்க ரசிகர்கள் மற்றும் மக்கள் எண்ணங்களை வைத்து கற்பனையாக உருவாக்கப்பட்டது.

Previous articleசர்கார் கதை திருட்டு? எஸ்.ஏ.சந்திரசேகர், முருகதாஸ் கூட்டு!
Next articleHow to cool a Beer within 5 minutes
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here