Thadam Movie Review | தடம் விமர்சனம்
ஓவ்வொரு முறையும் பார்த்து அலுத்துப்போன கதைகளையே மீண்டும் பார்க்கும்போது இனி தியேட்டர் பக்கம் வர்றது வேஸ்ட் என ரசிகர்கள் முடிவு கட்டிவிடுவர்.
அப்படி தியேட்டர் பக்கம் வராத தமிழ் ராக்கர்ஸ் டவுன்லோடர்களைக்கூட தியேட்டருக்குக் கூடிக்கொண்டு வருவது தடம் போன்ற படங்கள்.
தடையறத்தாக்க கூட்டணிக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக இணைந்த அருண்விஜய்-மகிழ்திருமேனி கம்போஹிட் படம் தடம்.
இதுவரை எங்கோ ஒரு மூளையில் இயக்குனர்-நடிகர் என முத்திரை பதித்து வைத்திருந்த இருவரும் ஓவர் நைட்டில் தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆகிவிட்டனர்.
மகிழ்திருமேனியை முதிர்ந்த முன்னணி இயக்குனர் அந்தஸ்துக்கு கொண்டு சென்றுவிட்டது இப்படம்.
டைட்டிலில் வரும் இசையைக் கேட்டதும் கொஞ்சம் கசப்பான கஷாயம் குடித்தது போன்று இருந்தது. டைட்டில் முடிந்ததும் இசையால் நம்மைக் கட்டிப்போட்டுவிட்டார் அருண் ராஜ்.
ஒளிப்பதிவு நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். நிறைய ஷாட்டுகள் டி.ஐ. பண்ணாமல் சிறப்பாக நேர்த்தியாக எடுத்திருந்தனர்.
பல காட்சிகள் பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட படம் பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. அந்த அளவிற்கு செயற்கைக் காட்சிகள் குறைக்கப்பட்டு இருந்தது.
அருண் விஜய்யிடம் என் பெயர் தெரியுமா எனக் காதலி கேட்கும் காட்சியில் ஏதோ ஒரு உணர்ச்சியை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. அதேபோன்று படத்தில் நிறையக்காட்சிகள் உள்ளது.
இரட்டை வேடம் என்றால் கூடுதல் மெனக்கெட வேண்டும். அதிலும் ஒரு ஆக்ரோசமான பைட் காட்சிகள் வேறு உள்ளது. அருண் விஜய் மிகவும் சிரத்தையுடன் நடித்துள்ளார்.
எடிட்டிங், கிராப்பிக்ஸ் பணிகளும் சிறப்பாக இருந்தது. எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
வித்யா பிரதீப் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஓவர் குளோசப்பில் பார்த்தால் உதட்டுக்கு மேல் சின்ன மச்சம்.
நயன்தாராவை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருகிறார். ரெண்டு பெரும் கேரளா என்பதாலோ என்னவோ ‘நான் ஐடன்டிக்கள் டிவின்ஸ்’ போன்று உள்ளனர்.
இரண்டு நாயகிகள். ஆனால், ஹீரோயினுக்கான தோற்றம் இல்லாமல், சாதாரண பெண்களைப் போன்றே தோன்றினர். அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.
அதிலும் தன்யா ஹோப், பெமினா மிஸ் இந்தியா வென்றுள்ளார். இருந்தாலும் இவர்கள் தமிழ் சினிமாவிற்கு ஏற்ற முகங்களாகத் தோன்றவில்லை.
சோனியா அகர்வாலின் சென்டிமென்ட் காட்சி ஏதோ ஸ்பீட் பிரேக்கர் போல் உள்ளது. உருக்கமாக அழும் காட்சியை சற்று குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் தடம் தரமான படம்