Home நிகழ்வுகள் உலகம் கரோனா வைரஸ் என்றால் என்ன? – Coronavirus Tamil

கரோனா வைரஸ் என்றால் என்ன? – Coronavirus Tamil

6749
9
கரோனா வைரஸ் Coronavirus Tamil

கரோனா வைரஸ் என்றால் என்ன? Coronavirus Tamil Explain Wikipedia. Coronavirus Disease Treatment,Infection, symptoms Awareness, Corona virus Name Meaning.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி தொற்றாகும்.

இந்த வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தென்கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என உலகின் அனைத்து நாடுகளுக்கும் விரைவாகப் பரவி வருகிறது.  இதனால் உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் எப்படி பரவியது

கரோனா வைரஸ் (கொரொனா வைரஸ்) எப்படிப் பரவியது என்ற முழுமையான விவரம் இதுவரை தெரியவில்லை. பாம்பில் இருந்து பரவி இருக்கலாம் என்ற கணிப்பு மட்டுமே சீனா அரசு தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று பலமடங்கு வேகமாக பரவுவதால் முதலில் அதை எப்படி அழிப்பது என்பது பற்றியே அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

வைரஸ் பரவியதற்கான காரணம் பற்றிய விசாரணையும் ஒருபுறம் நடந்துகொண்டு தான் உள்ளது.

ரோனா பெயர்க்காரணம் Corona Virus Name Meaning Tamil

Corona Virus Name Meaning

சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி அதனால் காய்ச்சல் உண்டாக்கி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள கடும் தொற்று வைரஸ் கரோனா.

சீனாவில் தொடங்கிய இது; உலகம் முழுவதும் பயத்தை உண்டாக்கியுள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு அதன் கிரீடம் போன்ற உருவ அமைப்பின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது.

குணப்படுத்தும் மருந்து Coronavirus Disease Treatment Tamil

வழக்கமாக புதுவித வைரஸ் நோய் பரவினால் அதை உடனடியாகக் குணப்படுத்த முடியாது. அதை மேலும் பரவ விடாமல் தடுக்க மட்டுமே முடியும்.

வைரஸ் நோய்களுக்கு மருந்துகள் என்பது இன்னும் முறையாக கண்டுபிடிக்கப்படாமலே உள்ளது. எனவே, புதிய நபர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுத்தால் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

சார்ஸ்ஸின் மருஉருவமா கரோனா

2003-ம் ஆண்டு உலகையே உலுக்கிய வைரல் நோய்த் தொற்று சார்ஸ். உலகம் முழுவதும் 800 உயிர்களைப் பலி கொண்டது.

சார்ஸ் நோய்த் தொற்றின் அறிகுறிகளும் கரோனாவின் அறிகுறிகளும் பொதுவானதாகவே உள்ளது.

சார்ஸ் கடுமையான நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தி அதன் விளைவாக ப்ளூ காய்ச்சல் உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியது. ஒரு வருடத்திக்குள் 30 நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.

கரோனா வைரஸ் அறிகுறிகள் corona virus symptoms

சார்ஸ் போன்றே கரோனா நோய்த் தொற்றும் சுவாசப் பாதையின் மேற்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி தொடர்ந்து நுரையீரல், குடல் பகுதிகளுக்கு பரவுகிறது.

சளி, இருமல், சுவாசக் கோளாறு, உயிர்பலி போன்ற அனைத்தும் சார்ஸ், கரோனா இரண்டிற்கும் பொதுவான அறிகுறிகளாகவே காணப்படுகிறது.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகள்

பொதுவாக வைரஸ் தொற்று முதலில் பாதிப்பை ஏற்படுத்துவது குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், காசநோயாளிகள் போன்றவர்களைத்தான். அதாவது, நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்கும்.

Coronavirus Tamil Awareness இதனை தடுக்க நோய்த்தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். இருமல் மற்றும் .தும்மல் வரும்போது கைக்குட்டையால் வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை மூடிக்கொள்ள வேண்டும்.

அதிகம் வெளியில் செல்வது; அதிகம் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்ப்பது நோய்த்தொற்று பரவாமல் தடுக்க உதவும்.

Coronavirus Infection சுவாசப் பிரச்சனைகள், ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை நாடுதல் நலம்.

Previous articleMaster 3rd Look Poster: உண்மையில் நான் மிரண்டு விட்டேன்
Next articleசியாமளா நவராத்திரி என்றால் என்ன? அதன் சிறப்புகள்!

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here