Home நிகழ்வுகள் இந்தியா ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய்

ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய்

321
0
ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய்

ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது தமிழக அரசு. ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த மதியழகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர்.

சேலம்: சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தவர் சேலத்தை சேர்ந்த மதியழகன்.

இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முந்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இதற்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார்.

இதனை அடுத்து மதியழகன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதியழகன் மறைவுக்கு ராணுவ செய்தித்தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் பணியில் வீர மரணம் அடைந்த மதியழகனின் உயிர்தியாகத்தை நாடு மறக்காது என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தன்னலம் பாராது நம் தாய்நாட்டிற்க்காக தன்னை அர்ப்பணித்து உயிர்த்தியாகம் செய்த மதியழகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மதியழகனின் குடும்பத்திற்க்கு உடனடியாக 20 லட்சம் ரூபாய் வழங்க சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்

Previous articleஅம்மன் வேடம் யாருக்கு பொருத்தம்? டிரெண்டாகும் அம்மன் வேடத்தில் நடிகைகள் ஹேஷ்டேக்!
Next articleமிரட்டும் ஐஸ்வர்யா தத்தா: மிளிர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here