கொரோனா வெறும் டிரைலர் தான் இன்னும் 1500 வைரஸ் மாதிரிகள் இருக்கிறதாம்; அதிர்ச்சி தகவல், சீனாவின் ஆய்வகங்களில் கொரோனா போன்று இன்னும் 1500 வைரஸ் மாதிரிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.
உலகையே ஆட்டிபடைக்கும் கொரோனா வைரஸ் வவ்வாலில் இருந்து பரவவில்லை. சீனாவின் ஆய்வகங்களில் இருந்து தான் பரவி இருக்கிறது என்ற தகவல் பரவி வருகிறது.
சீனாவில் இருக்கும் வைராலஜி இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் வுஹான் தான் கொரோனா வைரசின் பிறப்பிடம் அங்கு இருந்து வைரஸ் வெளி வந்து இருக்கிறது என கூறி வருகின்றனர்.
ஆசியாவில் பாதுகாப்பு அதிகமுள்ள ஆய்வகம் இது. இது குறித்து விசாரிக்க அமெரிக்காவிலிருந்து புலானாய்வு துறை ஒன்று செல்ல தயாராக உள்ளது.
இவர்கள் அங்கு சென்றால் மட்டுமே உண்மை புலப்படும். இது குறித்து சீனா அரசு தெரிவிக்கையில், கொரொனா வைரஸ் எப்படி உருவாகி பரவியது என்பது தெரியவில்லை.
தங்களது ஆய்வகங்களில் இருந்து கொரோனா பரவிய குற்றச்சாட்டு மற்றும் 1500 வைரஸ் மாதிரிகள் குறித்த சர்ச்சைகளை முற்றிலும் மறுக்கிறது.