இரண்டாம் நாளாக 3000 ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. நேற்று முன்தினம் மற்றும் நேற்று என தமிழகத்தில் புதிய உச்சம் தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு.
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் சென்னை தொடர்ந்து பாதிப்பு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 3,645 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,956 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 46 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 1,358 பேர் சிகிச்சை பெற்று முழுமையாக குணமனடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று புதிதாக 3,645 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதியானதால் இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் தமிழகத்தில் 33,675 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 2000-ஐ தாண்டியது. நேற்று முந்தினம் முதன் முறையாக 3000-ஐ தாண்டியுள்ளது.
நேற்று ஒரே நாளில் 46 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 957 ஆக பதிவாகியுள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிக்கை வெளியாவுடனே அனைவரும் அவர் அவர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் தொற்று இல்லாத மாவட்டங்களிலும் தொற்று பரவி வருகிறது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2,211 பேர் ஆண்கள், 1,434 பேர் பெண்கள் ஆவர்.
செங்கல்பட்டில் 232 பேருக்கும், மதுரையில் 190 பேருக்கும், வேலூரில் 148 பேருக்கும், திருவள்ளூரில் 177 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.